Bhushavali
காலை எழுந்ததும் - பற்குச்சி பற்பசை...
பிறகு - சோப்பு, சோப்பு குப்பி,
தலைக் குளியலுக்கு ஷாம்பூ, அதற்கென்று ஒரு குப்பி..
பள்ளிப் பருவத்தில் -
தண்ணீர் குப்பி, உணவுப் பெட்டி, பேனா, புத்தக உரை...
கல்லூரி காலமோ கஷ்ட காலம் -
அழகு சாதனப் பொருட்கள், வாசம் மணக்கும் சென்ட்டுகள், பத்து வகைச் செருப்புகள், இருபது வகை அணிகலன்கள்...
வேலைக்கு வந்த பின் -
இரண்டு / நான்கு சக்கர வாகனம், மொபைல், லேப்டாப்...
இவை அனைத்துமே பிளாஸ்டிக்கில் இருக்கையில்,
எங்கே தம்பி போனது - இயற்க்கை சார்ந்த வாழ்வு...?????


Kaalai ezhundhadhum - Parkkuchchi, parppasai...
Piragu - Soap, soapu kuppi,
thalaikkuliyalukku shampoo, adharkkendru oru kuppi...
Pallip paruvaththil -
Thanneer kuppi, unavup petti, pena, puththaga urai...
Kalloorik kaalamo kashta kaalam -
azhagu saadhanap porutkal, vaasam manakkum senttugal, paththu vagai seruppugal, irubhadhu vagai anigalangal...
Velaikku vandhapin -
Irandu / Naangu chakkara vaaganam, mobile, laptop...
ivai anaiththum plastikkil irukkayyil,
enge thambi ponadhu - iyarkkai saarndha vaazhvu...?????
Bhushavali
மனமுடைந்து, நிலை குலைந்து, தடுமாறிய காலத்தில்,
கை கொடுத்து, தோள் கொடுத்து,
என்னைத் தேற்றிய நல்லுள்ளங்களுக்கு,
இப்பதக்கம் சமர்ப்பணம்...

Manamudaindhu, nilai kulaindhu, thadumaariya kaalathil,
kai koduthu, thol koduthu,
ennaith thetriya nal ullangalukku,
ippadhakkam samarppanam...


பலியிட்ட ஆட்டிற்கு புல்லாய்...
மாண்டுவிட்ட குதிரைக்கு கொள்ளாய்...
வாடி வதங்கிய பின்,
என்னிடம் வந்து சேர்ந்தது எனக்குரியது....

paliyitta aattirkku pullaai...
maanduvitta kudhiraikku kollai,
vaadi vadhangiya pin,
ennidam vandhu serndhadhu enakkuriyadhu....


பிறிதொரு நேரத்தில்,
செவியோடு செய்தி வர,
விழிகளில் நீர் நிற்க,
மொழியின்றி தடுமாற,
பயணங்கள் நினைவுகொண்டு,
சுகமின்றி துக்கமின்றி,
நடுநிலையில் நான்......

Piridhoru nerathil,
Seviyodu seidhi vara,
vizhigalil neer nirka,
mozhiyindri thadumaara,
payanangal ninaivukondu,
sugamindri dhukkamindri,
nadunilayil naan......
Bhushavali
தேனீர் - சாயா - டீ.....
உனைத்தேடி ஒரு நெடும் பயணம்.....

கடிகாரத்தின் முட்கள் காலை மணி பதினொன்றைத் தொட,
ஏ / சி யின் ரீங்காரம் தொடர்ந்து தாலாட்ட,
கணிப்பொறியில் வேலை நிறைந்திருக்க,
விழிகளை வருடுகிறது உறக்கம்...
வழிய முயற்சித்து,
விழிகளைத் திறந்து,
மூளையை உசுப்பி,
கை / கால்களை உதறி,
சிரத்தை அசைத்து,
உறக்கத்திற்கு ஒரு பிரியா விடை...

மீண்டும்....
கடிகாரத்தின் முட்கள் மாலை மணி நான்கினைத் தொட,
ஏ / சி யின் ரீங்காரம் தொடர்ந்து தாலாட்ட,
கணிப்பொறியில் வேலை நிறைந்திருக்க,
விழிகளை வருடுகிறது உறக்கம்...
மீண்டும்....

வழிய முயற்சித்து,
விழிகளைத் திறந்து,
மூளையை உசுப்பி,
கை / கால்களை உதறி,
சிரத்தை அசைத்து,
உறக்கத்திற்கு ஒரு பிரியா விடை...


மீண்டும்...
மறுநாள் காலை கடிகாரத்தின் முட்கள் மணி பதினொன்றைத் தொட...

தினமும் தொடரும் சங்கதி...


theneer.. chaya... tea..
unaiththedi oru nedumpayanam...

kadigaarathin mutkal kaalai mani padhinondraith thoda,
a/c yin reengaram thodarndhu thaalaata,
kanipporiyil velai nirandhirukka,
vizhigalai varudugiradhu urakkam...
valiya muyarchiththu,
vizhigalaith thirandhu,
moolaiyai usuppi,
kai/kaalgalai udhari,
siraththai asaithu,
urakkaththirkku oru piriyaa vidai...

meendum,
kadigaarathin mutkal maalai mani naanginaith thoda,
a/c yin reengaram thodarndhu thaalaata,
kanipporiyil velai nirandhirukka,
vizhigalai varudugiradhu urakkam...
meendum,

valiya muyarchiththu,
vizhigalaith thirandhu,
moolaiyai usuppi,
kai/kaalgalai udhari,
siraththai asaithu,
urakkaththirkku oru piriyaa vidai...


meendum...
marunaal kaalai kadigaarathin mutkal mani padhinondraith thoda...

Dhinamum thodarum sangadhi...
Bhushavali

Away from the bustling noise of horns,
Here I am amongst the bustling music of the waves…
Just me and the sea,
With the waves dancing as lovely as they can be…

I am alone,
No,Not repenting my loneliness,
But enjoying my solitude…
Looking across the sky
From the bed of shells beneath…

I am wet,
No,
Not with a shower or sweat,
But with the waves playing,
With my toes and swaying…

I am blue,
No,
Not poisoned or cold,
But with the sparkling water,
Reflecting on me as they shatter…

I am kissed,
No,
Not the romantic one from my man,
But the warm one,
From the setting sun…

I am hugged,
No,
Not the warmth of my beloved ones,
But the coldness,
Of the bellowing winds…

And now,
Am I in Love…???

With the shells and the sea and the shore,
From my heart from its deepest core,
More and more and all the more…
Bhushavali
மற்ற இடங்களில் நூறுக்கு இரண்டு என்ற விகிதம் இருக்க...
இங்கு மட்டும் இருபத்தெட்டிற்கு நான்கு என்ற விகிதம் இருக்குமாம்...
அதாவது...,
ஏழில் ஒரு பங்கு...
நானோ...,
அந்த ஏழிலும் தொலைந்து போன
ஒரு
ஏழரை....

matra idangalil noorukku irandu endra vigidham irukka,
ingu mattum irubaththetirrkku naangu endra vigidham irukkumaam...
adhavadhu,
eazhil oru pangu...
naano,
andha ezhilum tholaindhu pona
oru
eazharai...
Bhushavali
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,
நீ வந்து நினைவு படுத்துகிறாய்...
மனதை வதைக்கவும் செய்கிறாய்...

அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...
உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...
எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்
எனக்கது அருவருப்பாக இல்லை...
அது என் தட்டில் இல்லாதவரையில்...

ஆனால்,
நீ கேட்கிறாய்...
"நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...
உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-
எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???

நண்பா,
இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...
உன் மனம் நோகுமே என்று...

நண்பா,
உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...
நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...
உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...
என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு...

Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...


மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...

Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...
Bhushavali
தேவதை வம்சமாகி தேன் நிலா அம்சமாகி பூமிக்குள் ஊர்வலம் வந்த வானவில்லாகிய காலம் மலை ஏறி விட்டதடா...
இன்று நாங்கள் பாரதியின் வம்சமாகி காளியின் அம்சமாகி பூமிக்குள் ஊர்வலம் வந்த புயற்சின்னங்களாகினோம்...
சூரியன் போனதும் அங்கு வரும் நிலவல்ல நாங்கள்...
சூரியனையே சுட்டெரிக்கும் நெருப்புச் சுடர்கள் நாங்கள்...
பூக்களின் வாசமாகவும் பூங்குயிலின் பாஷையாகவும் இருந்தது அந்த காலம்....
இன்று காட்டு நெருப்பின் வாசமாகவும் கடல் கொந்தளிப்பின் பாஷையாகவும் பஞ்ச பூதங்களின் ரௌத்திர குணங்களாகவும் உங்கள் முன்னே வீற்றிருக்கிறோம்...

Devadhai Vamsammagi, thennila amsamaagi, bhoomikkul oorvalam vandha vaanavillagiya kaalam malai eri vittadhada...
Indru naangal bhaarathiyin vamsamaagi kaaliyin amsamaagi bhoomikkuloorvalam vandha puyal chinnangalaaginom..
suriyan ponadhum ange varum nilavalla naangal...
suriyanaye sutterikkum neruppu chudargal naangal...
pookalin vaasamagavum poonguyilin bhaasayagavum irundhadhu andha kaalam...
indru kaatu nerupin vaasamagavum kadal kondhalipin bhasayagavum panja boodhangalin rowdhra gunangalagavum ungal munne veetrirukkirom...
Bhushavali
ரௌத்ரம் பழகு என்றாயே...
நீ கூறியது தவறா?
நான் புரிந்து கொண்டது தவறா?
என் ரௌத்ரம்,
என்னையே அழிப்பதென்ன???
கூறடா பாரதி...

Rowdhram Pazhagu endraye...
Nee kooriyadhu thavaraa?
Naan purindhukondadhu thavaraa?
En roudhram,
Ennaye azhippadhenna???
Koorada Bharathi...


சுட்டும் விழிச்சுடர்கள் தளர்ந்து விட்டன...
வட்டக் கரியவிழிகள் சிவந்து விட்டன...
பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வைரங்கள் இங்கு தடங்கல்களாயின...
வெறுப்பும் வருத்தமும் குடிகொண்ட முகத்தில் சுந்தரப் புன்னகை தொலைந்து போனது...
நெஞ்சின் அலைகள், ரௌத்திர அலைகள் அடித்து ஓய்ந்தன...
குரலோ கேட்பாரின்றி தவித்தது...
குமரி என் மீது மருவக் காதல் கொண்டவன் எங்கோ தொலைவில்..
ஏனடா எனக்கு இன்னிலை,கூறடா பாரதி....

chuttum vizhichudargal thalarndhu vittana...
vattak kariyavizhikal chivandhu vittana...
pattu karuniila pudavaiyil padhiththa nal vairangkal ingu thadangalgalaayina...
veruppum varuththamum kudikonda mugaththil sundhara punnakai tholaindhu poonadhu...
nenjin alaigal, raudhdhira alaikal adiththu ooyndhana...
kuralo ketpaarindri thaviththadhu...
kumari en meedhu maruvak kaadhal kondavan enggoo tholaivil..
eenadaa enakku innilai,kuuradaa baarathi....


நல்லதோர் வீணை செய்து
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
என்று அன்று சிவ சக்தியிடம் கேட்டாய்....
என் சிற்றறிவு வல்லமையின்றி தொலைகிறதே
சுடர் மிகும் அறிவு கொண்ட உன் நிலை
இன்று புரிகிறது...

nalladhor viinai seydhu
adhai nalam keda puzhudhiyil erivadhundo
enru anru shiva shakthiyidam kettaay....
en chitrarivu vallmaiyindri tholaigiradhee
chudar migum arivu konda un nilai
indru purigiradhu...


ஆசை முகம் மட்டுமல்ல
எல்லாமே மறந்து போச்சு
செவிப்பறைகளுள் திட்டுகள் மட்டுமே...

aasai mugam mattumalla
ellame marandhu poochu
sevipparaigalul thittugal mattume...


பொழுது புலர்ந்தது நான் செய்த தவத்தால் தானோ?
கோர நிகழ்வுகளையும் தரிசிக்க வேண்டிய கொடுமையையும்
உடன் இழுத்து வருகிறதே ...

pozhudhu pularndhadhu naan seidha thavathaal dhaano?
kora nigazhvugalayum sandhikka vendiya kodumayayum
udan izhuthu varugiradhe...
Bhushavali
உண்மை பொய்யானதென்ன...???
பொய் நீடிப்பதென்ன..???
உன் திருவிளையாடலா..???
இல்லை, நீ அடிபட்டுவிட்டாயா...???

Unmai poyyanadhenna..???
Poi needippadhenna..???
Un thiruvilayaadalaa..???
Illai, neeye adipattuvittaayaa...???