Bhushavali N
உன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன.? 
உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் வீடு தான் இங்கிருக்கிறதே, உனக்கென்ன.? 
உன் சம்பளம் தான் இவ்வளவாயிற்றே, உனக்கென்ன.?  

நீ கேட்ட இந்த கேள்விகள் அனைத்தையும், 
மனத்தின் ஆழத்தில் தள்ளி பூட்டி விட்டேன். 
இதழோரம் புன்னகை பூத்து விட்டேன்.  

இன்றோ நீ, 
உனக்கு தான் தினமும் நல்ல உணவு கிடைக்கிறதே.? 
உன் உணவு தான் சத்தானதாயிற்றே.? 
இப்படியும் உன்னிடமிருந்து கேள்விகள்.  

இதை ஒரு உணவற்ற ஏழை கேட்டிருந்தால், 
எண்ணங்கள் வெறு திசை சென்றிருக்கும். 
நீ ஏன் கேட்டாய்.?  

மனிதா,
'உணவுக்குக் கூட கண் வைத்தால் 
அது செரிக்குமா.?' - என சிலர் கேட்பர். 
என்னைப் பொருத்த மட்டில், 
என் வயிற்றில், 
அது செரிக்கும், நன்றாகவே செரிக்கும்.  

ஆனால், 
என் மனதிலோ, 
சுற்றமாய் நின்ற நீ, 
நண்பனாய் செரிக்காமல், 
யாரோ ஒரு மனிதனாய் 
உருமாறிவிட்டாய்...


Un kulam dhaan idhuvaayitre, unakkenna.? 
Un thandhai dhaan ivaraayitre, unakkenna.? 
Un thaay dhaan ivaraayitre, unakkenna.? 
Un veedu dhaan ingirukkiradhe, unakkenna.? 
Un sambalam dhaan ivvalavaayitre, unakkenna.?  

Nii ketta indha keelvigaL anaiththaiyum, 
Manathin aazhaththil thalli pootti vitten. 
Idhazhoram punnagai pooththu vitten.  

Indro nii, 
Unakku dhaan dhinamum nalla unavu kidaikkiradhee.? 
Un unavu dhaan saththaanadhaayire.?
Ippadiyum unnidamirundhu kelvigal.  

Idhai oru unavatra ezhai kettirundhaal, 
EnnanggaL veru dhisai sendrirukkum. 
Nii en kettaay.?  

Manidhaa, 
'Unavukku kooda kan vaithaal 
Adhu serikkumaa.?' - ena silar ketpar. 
Ennai poruththa mattil, 
En vayitril, 
Adhu serikkum, nandragave serikkum.  

Aanaal, 
En manadhilo, 
Sutramaay nindra nii, 
Nanbanaay serikkaamal,
Yaaro oru manidhanaay 
Urumaarivittaay...
25 Responses
 1. Sowmi Says:

  அருமை. நீ கோவித்து கொள்ள மாட்டாய் என்றால் ஒரு கேள்வி. யார் இப்படி எல்லாம் உன்னை கேள்வி கேட்டது? அல்லது உனது ஆழ்ந்த சிந்தனையின் வெளியீடா??? அருமை :)


 2. @Sowmi,
  இன்று நடந்த சம்பவம்... என்னை பாதித்ததால் வார்த்தைகளில் வெளியான சம்பவம்...
  ஒருத்தர் அல்ல... ஒரு சிலர்...


 3. Sowmi Says:

  varundhugiren amma!!! Sorry for that english interlude lol!!! anyway don't get hurt... if you get hurt immediately put it as words like this.. u'll feel relieved. I opened my blog for that only and that's why its titled as ENIGMATIC RANTINGS da :)


 4. Anonymous Says:

  evatril paadhi kaelvigal ennayum vandhadaidhadhu......vaarthaigalaaga alla, agathin velippadu....mugathin vaayilaaga....

  asattu punnagayai thavira.....ivargaladhu ariyaamaikku.....vaerenna padhilalippadhu....

  P.S: enna kuviyalgal anaithum arumai.....thodarattum.....


 5. @Sow,
  That's why putting in words like this da...

  @Ayesha,
  //asattu punnagayai thavira.....ivargaladhu ariyaamaikku.....vaerenna padhilalippadhu....// - Unmaidhan...
  Thank you.. :)


 6. Sujay Says:

  பூட்டிய நினைவுகளில் கூட சிலர் இருப்பதை தவிர்ப்பவன் நான்...


 7. @ Sujay,
  Its a good policy...


 8. narayanan Says:

  புடம் போட்ட தங்கம்தான் ஜொலிக்கும். ஒவ்வொரு அடியையும் (சொல் தாக்குதலையும்) தங்கத்தின் மீது விழுந்த அடிகளாக எடுத்துக்கொள் தோழி. ஜொலிப்பாய்.


 9. narayanan Says:

  I should have ended like this.

  ஜொலிப்பாய்; கெலிப்பாய்.


 10. @Nags, தேற்றுதலுக்கு நன்றி... :)


 11. narayanan Says:

  "இதை ஒரு உணவற்ற ஏழை கேட்டிருந்தால்,
  எண்ணங்கள் வெறு திசை சென்றிருக்கும்.
  நீ ஏன் கேட்டாய்.? "

  "நண்பனாய் செரிக்காமல்,
  யாரோ ஒரு மனிதனாய்
  உருமாறிவிட்டாய்..."

  These two lines are really awesome.


 12. @Nags
  Thank you.. :)


 13. seenu Says:

  nice velipaadu...and y did they asked like tat?? athu puriyilaa...


 14. Vennimalai N Says:

  தங்களுக்கு?!!!?,
  வார்த்தைகள் கனைகளாய் உருவாகி காயப்படுத்தியதா?
  பேரதிர்ச்சி!!
  கனைகளைக் களைந்து, துடைத்தெறிந்துவிட்டு
  தங்களின் அதிரடி தைரிய மனத்தை
  புதுப்பித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!!!

  வடுவெல்லாம் ஒரு ஓரமாய் கிடக்கட்டும்,
  தோழி,
  அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம்...

  அந்த நல்ல சத்தான உணவு,
  அதுவும் தாங்கள் உண்ணும்பொழுது,
  கண் திருஷ்டியோ செரிமானமின்மையோ தோன்றுமோ?, என எண்ணும் அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவாகக் காரணமாயிருந்ததென்றால், அந்த அற்புத உணவு... ம்ம்ம்?!!

  ஏதாவது இந்தியன் / சைனீஸ் / கான்டினன்டல் /
  மெக்ஸிகன் வகைகளிலோ இவைகளிலடங்காத
  வகைகளிலோ ஏதேனும் ஒன்றாயிருப்பின்
  .....
  அந்த பொன்னான
  ரெசிப்பி கிடைக்குமா?


 15. RATO TAMIL Says:

  appadi yenathathan ketan unna????

  anyway nice

  "KEEP TRYING
  KEEP ON TRYING"

  ithu pepsi UMA sonnathu

  "KEEP WRITING

  KEEP ON WRITING"

  ithu nan sollrathu


 16. @Seenu,
  Adhan enakkum puriyala..!!! :(

  @Venni Anna,
  Sadharana South Indian full meals... Adhukkudhan indha effect...

  @Rats,
  Mela ezhudhi irukkaradha dhan kettan...
  Sure Rats, i'll keep on writing with the continuous wishes of dear friends like you.. :)


 17. Such questions like 'unakenna' come from those who are not happily and better placed in life than the other though they are in bad taste.But that is a common human failing.
  First visit.I was impressed with the blog


 18. Hi Parthasarathi,
  Welcome to my blog... Thanks for dropping in and commenting... Happy to have impressed you...
  Do drop in often...
  And do visit my other blog also... :)


 19. RATO TAMIL Says:

  addipavi oru vela sappatuka

  ivallavu arpatam

  seri unnaku yennavenumnu sollu????
  (if i want to write in tamil wat i want to do)
  athukaga tamila ezhuthanumnu sollatha////


 20. @Rats,

  Ennatha seyya... Idhukkudhan indha effect.. Enakku onnum vendam... Nimmadhiyaa irukka vitta podhum...

  Try this for typing in Tamizh
  http://muthu.org/web/tamiltypingtool


 21. SanjaiGandhi Says:

  அட ரொம்ப வித்தியாசமா இருக்கே.. கவிதையும் பதிவிடும் முறையும் தான். தமிழ் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழில். தமிழ் பேச / புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு ஆங்கிலத்தில். எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா.. :)

  இந்த ப்ளாக் டெம்ப்ளெட் ரொம்ப காலமா என் நன்பர் ஒருவர் உபயோகிக்கிறார். அவர் தான் வேறு பெயரை போட்டு அவர் ப்ளாகிற்கு லின்க் குடுத்துட்டாரோன்னு நெனைச்சேன். ஹிஹி.. வேற ஒன்னியும் இல்லீங்க..

  உங்க பயணக் கட்டுரைகள் ப்ளாகும் பார்த்தேன். இந்தியாவில் எந்த இடத்தையும் விட்டு வைக்கலை போல. நாமக்கலிற்கு சில நூறு முறை சென்றிருந்தாலும் அந்தக் கோவில்களை எல்லாம் சென்று தரிசிக்கவில்லை. உங்கள் கட்டுரை படிக்கும் போது புதியதாய் இருந்தது. வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் சேவை.


 22. @SanjayGandhi,
  நன்றி... ஒரு சில நண்பரகளின் வேண்டுகோளுக்கிணங்க செய்தது...
  நீங்கள் இந்த வலைப்பதிவை Follow செய்வதைப் பார்த்தேன்... மிக்க நன்றி....


 23. SanjaiGandhi Says:

  என்னாது.. ஃபாலோ பன்றதுக்கு நன்றியா? அடி விழும். நான் உங்க ப்ளாக் ஃபாலோ பண்ணா நீங்க என் ப்ளாக் ஃபாலோ பண்ணனும்.. இதெல்லாம் மார்கெட்டிங்க் டெக்னிக் அய்யாசாமி.. :)

  vist me at http://blog.sanjaigandhi.com

  எப்புடீஈஈஈஈ.. :)


 24. SanjaiGandhi Says:

  //Try this for typing in Tamizh
  http://muthu.org/web/tamiltypingtool//

  இது சரிவராது தோழி. தலையை சுத்தி மூக்கைத் தொடும் வழி இது. just install one of some better softwares that available specially for typing tamil.. I m using NHM writer. go to http://software.nhm.in/products/writer and download the NHM witter on ur machine and follow the instruction. then u can type Tamil directly at anywhere. it works in Google chrome too.

  மெயில் , சாட், சர்ச் எஞ்சின், ப்ளாகர் கம்போஸ், கமெண்ட் பாக்ஸ் என எங்க வேணும்னாலும் நேரடியா டைப் பண்ணலாம். இப்போ நான் டைப் பண்ற மாதிரி.


 25. @Sanjay,
  Done... Appo neenga ennoda innoru blog'ayum follow pannanume... Idhuvum Marketing technique... :D
  Eppadiiiii... :P


Post a Comment