உன் கைகளால்
என் கால்களைப் பற்றி
தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய்.
என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது.
இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை நான் அறிவேன்.
விழிகளில் நீர் வற்றி,
மனத்தில் வாழும் எண்ணம் வற்றி,
இதோ
என் மனத்திரையில் என் வாழ்வின் காலச்சக்கரம்;
என் விழித்திரையில் காலனின் சிரிப்பு.
உன் முகத்தில் சிறு சலனமும் இல்லை;
வாடிக்கையாளர் முகத்தில் உணவின் திருப்தி;
என் முகத்திலோ காலனைக் கண்ட பயம்.
உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.?
கொலை செய்வதில் உனக்கு அவ்வளவு விருப்பமா.?
பிணத்தை உண்ண உனக்கு அவ்வளவு விருப்பமா.?
Un kaikalaal En kaalkalaip patri
Thalaikiizhaay thongga vittirukkiraay.
En udalil innum uyir irukkiradhu.
Idhudhaan en kadaisi nimidam enbadhai naan ariven.
Vizhigalil niir vatri,
Manaththil vaazhum ennam vatri,
Idhoo
En manaththiraiyil en vaazhvin kaalachchakkaram;
En vizhiththiraiyil kaalanin sirippu.
Un mugaththil siru salanamum illai;
VaadikkaiyaaLar mugaththil unavin thirupthi;
En mugaththilo kaalanai kanda bayam.
Unakkaagave parpala chedikodigal irukka
Nii yen ennai unna virumbukiraay.?
Kolai seyvadhil unakku avvalavu viruppamaa.?
Pinaththai unna unakku avvalavu viruppamaa.?
வற்றியது அவ்வுயிரின் விழிநீர் மட்டுமல்ல,
பிரியமான தோழி!!,
நம்மனத்தின் மனிதமும் தான்,
மனத்திரையில் காலச்சக்கரம்?., ம்ஹூம்!!
நமக்கு
உன் சுவையும், உன்னிலிருந்து வரும் கொழுப்புமன்றோ...,
அதிமுக்கியம்!!
உனக்கு இப்பொழுது தரிசனம் தருகிறான் காலன்.,
உன்னை உண்பதால் நமக்கோ,
வெகு சீக்கிரத்தில் தந்துவிடுவான் அவன்!!
ஆம், கொலை செய்வதில் நமக்கு வெகு விருப்பம்தான்,
பின் என்ன?
உன்னை உயிருடன் விட்டால்,
நம் மக்கள் தொகையைப்போல் அதிகமாகி,
...
...
அரசியல், அறிவியல், புவியியல், வரலாறு, கணினியியல்..
இன்னும் பிறபல திறமைகளை வளர்த்து, எங்களுடன்
போட்டியாக வந்துவிட்டால்.... இருக்கும் உலக "மனித
வறுமைக்கோட்டின்" கணக்கே இன்னும் சரியாக
அறியாத புரியாத நிலையில் மேலும் பற்பல குழப்பங்கள்
உருவாகிவிடுமே... போன்ற நல்லெண்ணவகை பல கொண்டு
செய்யும் கொலைகளை நாம் யாரும் ஒரு பாவமாக கருதுவதே
நிரம்ப இழுக்கன்றோ?!
goood nala eluzthukal!!!
அண்ணா,
//உன்னை உண்பதால் நமக்கோ,
வெகு சீக்கிரத்தில் தந்துவிடுவான் அவன்!!//
முற்றிலும் உண்மை. ஆனால் இதை உணர்வோர் எத்தனை மக்கள்...
இயற்கையாய் உருவாவதை உண்டால் தவறில்லை. ஆதி கால மனிதன் அப்படிதானே இருந்தான்.
ஆனால், கொலை செய்வதற்காகவே Broiler'இல் உருவாக்குதல் பாவமன்றோ...???
அளவுக்கு மீறி கொலை செய்தல் பெரும் பாவமன்றோ...???
HaRy!!
நன்றி :)
//உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.?
கொலை செய்வதில் உனக்கு அவ்வளவு விருப்பமா.?
பிணத்தை உண்ண உனக்கு அவ்வளவு விருப்பமா.?//
வாவ்.. சூப்பர்மா.. நான் எல்லார் கிட்டயும் சொல்றது இது தான்.. அபாரம்.. நமக்கு சாப்பிட எவ்வளவோ இருக்கும் போது எதுக்கு அடுத்த உயிரை சொல்ல வேண்டும்?
இப்டி ஒரு கவிதைக்கு கை குடுங்க.. ;)
கவிதை நன்றக உள்ளது .வாழ்த்துகள்
arumanaya varthaikal!
So funny curly letters
I can't read it ....... LOL
:)
Have a lovely weekend :)
@Sanjai,
நன்றி.. :)
@Ganesh,
நன்றி.. :)
@HaRy!!
மீண்டும் நன்றி... :)
@Anya,
This is Tamizh Anya. One of the ancient 6 languages of the world along with Sanskrit, Greek, Latin, Hebrew, and Egyptian... :) It's a very beautiful language and I take pride that I know it... :)
// உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.? //
செடிகளுக்கு உயிர் இருக்குல்ல அப்ப அதையும் தான சாப்படக்கூடாது.
எல்லாமே கடவுள் படைப்புதான் அதனால எல்லாத்தையும் சாப்புடலாம்
தப்பே இல்லை :-))
@Karthik,
விலங்கினங்கள் செடி கொடிகளை உண்கின்றன. நீங்கள் அந்த விலங்கினங்களை உண்டால், அது இரட்டை கொலை ஆகும். அதுவே செடி கொடிகளை உண்டால் ஒற்றை கொலை தான். நம் உணவுக்காக ஒரு உயிரைக் கொன்றால் பத்தாதா..??? இரட்டை கொலை செய்ய வேண்டுமா..?????
மிஸ்டர் இலக்கியவியாதி கார்த்திக், சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் அசைவம் உண்பதைத் தவிர்க்கமுடியும். மேலும் இங்கு பிரச்சனை உயிர், உயிர் இல்லை என்பதல்லை. இது உணர்வுகளுடன் சம்பந்தப் பட்டது. உங்க வீட்டு முன்னாடி வச்சிருக்கிற ரோஜா செடியுடன் உள்ள தொடர்புக்கும் பூனைக் குட்டி ஆட்டுக் குட்டியுடன் உள்ள தொடர்புக்கும் வேறுபாடு இல்லையா? ரோஜா பூவை பறிக்கும் போது இருக்கும் உணர்வுக்கும் உங்க பூனைக் குட்டிக் காலை ஒடிக்கும் போது உள்ள உணர்வுக்கும் வித்தியாசம் இல்லையா?
இனி யாராச்சும் செடிக்கு இருக்கிற உயிர்க்கும் விலங்குகள் பறவைகளுக்கு இருக்கிற உயிர்க்கும் தொடர்பு படுத்துங்க. கொன்னுடறேன். நீங்களும் கடவுள் படைப்பு தானே. பிரியாணி போட்றலாமா? :))
// விலங்கினங்கள் செடி கொடிகளை உண்கின்றன. நீங்கள் அந்த விலங்கினங்களை உண்டால், அது இரட்டை கொலை ஆகும்.//
ஏங்க கொல பண்ணுரதுன்னு ஆனா பின்னாடி ஒத்த கொல என்ன ரட்ட கொலஎன்னங்க.நாங்க மட்டன் வாங்கும்போது கூட ஹாலால் செய்யப்பட்ட மட்டன் தான் வாங்குறோம்! அதனால கடவுள் எங்களை மன்னிசிருவார்!
//நீங்களும் கடவுள் படைப்பு தானே. பிரியாணி போட்றலாமா? //
வியாபார காந்தமே! நீங்க செஞ்சாலும் செய்விங்க!
அது இருக்கட்டும், மதியம் பிரியாணி சாப்பிட ஆபிஸ்க்கு வந்துருங்க!
பால் கூட கன்றுக்காக தான் வருகிறது! அதை ஏன் குடிக்கிறீர்கள்!
பால், காபி, டீ, தயிர், மோர், வெண்ணை, நெய் உபயோகிக்கும் எவரும் எங்களை நான்வெஜ் சாப்பிடுக்கூடாதுன்னு சொல்லக்கூடாது!
ஏன்னா நீங்களே நான்வெஜ் தான்!
ஆனா ஒரிஜினல் வெஜ் மாதிரி நடிக்கிறிங்க!
mitr.. இந்த இலக்கியவாதி கார்த்திக்கு இன்னைக்கு பொறந்தநாள். அதனால விட்ருங்க. :))
வாலு, எப்டி இப்டி எல்லாம்? :))
ஒன்னு பண்ணுங்க. ஒரு மாடு வாங்குங்க. அது குட்டிப் போடட்டும். அதோட பாலை கன்னு குட்டிக்கு மட்டும் குடுத்துட்டு அப்டியே விட்ருங்க. அடுத்த நாள் பாருங்க. மாடு செத்து போயிருக்கும்.
//ஒரு மாடு வாங்குங்க. அது குட்டிப் போடட்டும். அதோட பாலை கன்னு குட்டிக்கு மட்டும் குடுத்துட்டு அப்டியே விட்ருங்க. அடுத்த நாள் பாருங்க. மாடு செத்து போயிருக்கும். //
எல்லா பாலூட்டிகளிலிருந்துமா நீங்கள் பால் எடுக்குறீர்கள், மாட்டில் மட்டும் எடுத்து விட்டு புது கதை வேறு!
மாடு ஏன் சாகுது? எதுக்காக சாகனும்!?
ஒழுங்கா கன்னுகுட்டிய பால்குடிக்கவிட்டா!
அடிங்க.. சொல்றேன்ல.. ஒரு மாடோ எறுமையோ வளர்த்துட்டு அப்புறம் சொல்லுங்கன்னு. எல்லாப் பாலூட்டிகளிலுமா பால் எடுத்துக் குடிக்கிறாங்க?. மாடுகள், எறுமை மாடுகள் தேவைக்கு அதிகமாக பால் சுரக்கும். அதை வெளியேற்றவில்லை என்றால் உள்ளேயே கட்டிக் கொள்ளும். பின் இறந்துவிடும். வெளியூர் போய்விட்டால் சில சமயம் வேறு யாரையாவது பால் கறந்து வைக்கச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவை அந்நியரை இவைகள் சேர்ககாது. உதை தான். முழுவதுமாக பாலும் கறக்க முடியாது. கன்றும் ஒரு அளவுக்கு மேல் குடிக்க முடியாது. அந்த மாதிரி சூழலில் மாடு இறந்துவிடும். இந்த மாதிரி ஏராளமான சாவுகளைப் பார்த்திருக்கிறேன். சும்மா வாதம் பண்ணனும்னு பிட்டப் போடக் கூடாது. பிரிதா?. உங்களை யாரும் அசைவம் சாப்ட வேணாம்னு சொல்லலை. ஏன் சாப்பிடனும்னு தான் சொல்றேன்? :))
இவ்ளோ பேச்சுப் பேசறிங்களே.. ஏன் மனுஷனை வெட்டித் திங்கறதில்லை? செல்ஃபிஷ் கேங்.. :)
இந்த விவாதம் இங்க வேணாம். வாங்க நாம மொக்கை மெயில்ல வச்சிக்கலாம். இங்க பல விஷயங்களைப் பேச முடியலை. :)
மாடு,எருமை தேவைக்கதிகமான பால் சுரக்கும் என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம்!
வெட்டையாடி திங்கும் புலியும், சிங்கமும் தன் இனத்தையே அடித்து தின்கிறதா என்ன!?
ஒன்று தெரியுமா?
இரண்டு கண்களில் ஒரு காட்சியை பார்க்கும் விலங்குகள் அனைத்தும் predator என்று அழைக்கப்படும் வேட்டையாடி உணவைத்தேடுபவை,
அதிலிருந்து தப்ப வேண்டியவைகளுக்கு இரண்டு கண்களில் ஒருபுற காட்சி தெரியும்!
நான் அடிப்படையில் வேட்டையாடி கொண்டு தான் இருந்தோம்!
இன்று தான் வெட்டிநாயம் பேசி கோண்டிருக்கிறோம்!
@கார்த்திக்,
உங்களுக்கு 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா.??? முஹம்மது நபி ஏன் 'ஹலால்' செய்து உண்ணலாம் என்றார் என்பது தெரியுமா.? 'ஹலால்' என்றால் நீங்கள் உண்ண விரும்பும் உயிரை நீங்களே கொல்வதாகும். வேறு ஒருவர் கொல்வதை நீங்கள் உண்பதல்ல. உணவுக்காக ஒரு உயிருள்ள விலங்கை, பறவையை, அந்த உயிர் கதறக் கதறக் கொலை செய்தால், அந்த உயிரின் மரண ஓலத்தைக் கேட்டு நீங்களே அதை உண்ண மாட்டீகள். அப்படி ஒரு உணர்வை வெளிக்கொண்டு வரவே நபி அவைகள் 'ஹலால்' செய்து உண்ணலாம் என்றார்.
நீங்கள் ஒரு முறை உயிரோடு இருக்கும் கோழியை கொலை செய்து அதை உண்ட பின் இப்படி பேசுங்கள், பார்க்கலாம்.
@வால்பையன்,
உண்மைதான். மற்ற உயிர்களின் பாலினை குடிப்பது Lacto-Vegetarianism ஆகும். இதைத்தான் பொதுவாக Vegetarianism என்பார்கள். Veganism என்பது Diary-Products எனப்படும் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களயும் உண்ணாதிருப்பது. அந்த முயற்சியில் தான் இப்பொது ஈடுபட்டிருக்கிறேன். காபியை விட முடியாமல் இருப்பதால் நான் இன்னும் Vegan ஆகாமல் இருக்கிறேன்.
ஒத்துகிட்டா சரி!
மனிதனுக்கு சர்வைவல் ரொம்ப முக்கியம், அதற்காக கிடைபதை பயன்படுத்தி கொள்கிறான்!
இப்போது இருக்கும் ஆடு, கோழி வகையறாக்கள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன! அதன் இயற்கை இனபெருக்கத்தை விட வளர்ப்பதற்கு அதிக சிரத்தை எடுத்து கொள்கிறார்கள்!
அசைவ உணவு சாப்பிடுவதால் இந்த இனங்கள் அழியப்போவதில்லை!
ஆனால் மரபணு விதை காரணமாக நாட்டில் பல அரிசி வகைகள் அழிந்து போய் விட்டன தெரியுமா!?
@வால்பையன்,
//இப்போது இருக்கும் ஆடு, கோழி வகையறாக்கள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன! // - அதுதான் மஹா பாவம்...
//அதன் இயற்கை இனபெருக்கத்தை விட வளர்ப்பதற்கு அதிக சிரத்தை எடுத்து கொள்கிறார்கள்!
அசைவ உணவு சாப்பிடுவதால் இந்த இனங்கள் அழியப்போவதில்லை!// - அது தானே பிரச்சனை. 10 பேருக்கான மாமிசத்தை தயார் செய்யும் இடத்தில், நூறு பெருக்கான தானியங்களை தயாரிக்கலாம். By the way, உங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால், இப்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு, மனிதர்களை உண்ணலாம் என்பீரோ.??? ஏன்ன logic இது..???
மனிதனை கண்ணுக்கே தெரியாத வைரஸ்கள் பார்த்து கொள்ளும்!
ஒருவர் உயிர் வாழ எதாவது ஒரு வகையில் மற்றொரு உயிர் போய் தான் ஆக வேண்டியிருக்கிறது!
@வால்பையன்,
//ஒருவர் உயிர் வாழ எதாவது ஒரு வகையில் மற்றொரு உயிர் போய் தான் ஆக வேண்டியிருக்கிறது!// - Exactly.. Survival என்கிற போது, எது உயிர் வாழ, அத்தியாவசிய தேவையோ, அதை உண்டால் போதுமே.... அதற்கு செடி கொடிகளே போதுமே.... நீங்கள் Survival என்பதையும் தாண்டி ருசிக்காகத் தானே பிரேதத்தை உண்கிறீர்....
@வால்பையன்,
And humans are essentially designed to be vegetarians that's collectors and not predators as you've mentioned in a previous comment...
Foreg,
1. Lions have more no. of canines than molars in their teeth so they can tear the meat and we have more molars and less canines so we can grind and chew cereals and vegetables.
2. Lions have a very short intesine so the undigested meet is excreated sooner. We have a very long intestine and the undigested meet stays there for longer time. Its something like keeping meet un-refridgerated for same 3 days.
3. Lions have night vision to hunt. We have day vision to collect food.
//humans are essentially designed to be vegetarians that's collectors and not predators as you've mentioned in a previous comment...//
நாம் அனைத்துண்ணிகள் தான்!
அசைவம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றுமாவப்போவதில்லை!
அதே நேரம் அசைவம் சாப்பிடுவதாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை!
நாம் predator என்ற என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை!
விவசாயம் கண்டுபிடிக்கும் முன் மனிதன் அப்படித்தான்!
இன்றும் அந்த பழக்கம் நமக்குண்டு!
@வால்பையன்
/அசைவம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றுமாவப்போவதில்லை!// - Then why kill...???!!!!!
2 பேரும் அடங்க மாட்டிங்களா?
// Then why kill...???!!!!! //
அப்புறம் நீங்க எப்படி லெதர் செருப்பு
லெதர் பர்ஸ்,லெதர் ஹேன்பேக்,
லெதர் கார் சீட்கவர்......
இப்படி பயன்படுத்தரது.
இது எல்லாத்துக்கும் மேல நாம
எடுத்துக்குகர மாத்திரையே மாட்டு எலும்புல தான் செய்யுராங்கரது உங்களுக்கும் தெரியும் :-))
// SanjaiGandhi said...
2 பேரும் அடங்க மாட்டிங்களா? //
Birthday baby
இது ரத்தபூமி இங்கெல்லாம் வரப்புடாது.
தெரிஞ்சுதா :-))
@கார்த்திக்,
About the leather, ofcourse its not right too. Neither is using silk. I do not use them.
There is so much of fake leather in the market as an alternative. It doesn't give much life, but still the price is less than one fourth of leather. If u use a leather shoe for a yr, instead 4 fake leather shoes can be used for the same price in a yr and u can enjoy a variety too.. :) Logic... :)
//எடுத்துக்குகர மாத்திரையே மாட்டு எலும்புல தான் செய்யுராங்கரது உங்களுக்கும் தெரியும்.// - Get ur GK correct buddy. Go and ask any Doctor.. They'll tell u its wrong...
//Get ur GK correct buddy. Go and ask any Doctor.. They'll tell u its wrong... //
விலங்குகளின் கொழுப்பு பல வகைகளில் பயன்படுகிறது!
எலும்புகளும் தான்!
ஆனால் மாத்திரைக்கா என்று சரியாக தெரியவில்லை!
சக்கரையில் பயன்படுத்துவதாக சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்!
@வால்பையன்
The fat of animals is used in several foodstuff like jelly and also in gel toothpastes etc. Few calcium tablets also use animal bone calcium which all could be easily avoided and vegtarian alternatives are available in the market... :)
//vegtarian alternatives are available in the market... :) //
சுத்த சைவமாக இருக்க முயற்சிக்கலாம்!
ஆனால் உங்களையும் அறியாமல் நம் உடலில் அசைவம் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
நீங்க தெரியாம செய்யுறிங்க
நாங்க தெரிஞ்சே செய்யுறோம்!
கொன்னா தானே சாப்பிட முடியும்!
உயிரோட எப்படி சாப்பிடுறது!?
:)
@வால்பையன்
Its not a mistake if u do something wrong without you own knowledge. And it is when u do it deliberately...
At least I live without feeling the guilt of killing a life to fulfill my tastebuds...
Thozhi,
Halal patri neengal kooriya vilakkam sari alla......
Google seidhalae sariyana vilakkam kidaikum
I don't want to justify anything....views differ....:-)
Thozhi, halal patri neengal kodutha vilakkam sari alla........
I don't want to justify vegetarianism or non-vegetarianism.
Halal patri sariyana vilakkam....google pannalae kidaikum......
@Ayesha,
Wiki says, "Forbidden to eat - An animal that has been strangled, beaten (to death), killed by a fall, gored (to death), savaged by a beast of prey (except that which you may have slaughtered while it was still alive)[Qur'an 5:3]."
When someone else kills the animal, its automatically savaged... And also says "that YOU may have slaughtered' - which again denotes the same meaning...
Hi......the word halal generally means "something which is permitted or lawful"
In this context...."Halal" means a "method of slaughtering" in which the animal should suffer minimal amount of time.....meaning that the animal is being killed only for food and that it should not be tortured in any way.
The "YOU" in this context doesn't mean a single person.It also includes butchers who practise the halal method of slaughtering and any person who wishes to eat halal food. So it is not necessary that the person who eats have to slaughter it.
And the explanation that you have given for why mohammed said to eat halal is also not correct.
Eating non-veg is fully permissible in islam, provided you follow halal method.
There are so many procedures in halal. I am listing a few.
* The way animals are being transported.
The rearing and transportation of the animals should be in a healthy environment and in no way torturous to them.
*Dhabiha: Method of slaughter:
Dhabiha is the prescribed method of ritual slaughter of all animals excluding fish and most sea-life as per Islamic law. This method of slaughtering animals consists of a swift, deep incision with a sharp knife on the neck, cutting the jugular veins and carotid arteries of both sides but leaving the spinal cord intact.
This method is done because...as soon as this is done......the animal enters a state of unconsiousness...immediately..devoid of pain....and experiences an instant death. The shivering of the body is not because of the pain experienced by the animal. It has been scientifically proved.
Again I'm not justifying anything here. But I want to clarify what halal really is.......since its been quoted here.....
Dear all
Please go and check the link and answer it
http://www.youtube.com/watch?v=B1WCM-vM4Bw
That sounded quite scary. Especially the last two lines. Very graphical!!!
Well, my Tamil is is not that good to appreciate it too well. I do not know to read Tamil but can understand and talk the language. Your English trans-literation helped me read the poems. Good ones, I must say.
By the way, is this the last words of a chicken?
@Eka,
Thank you. Am glad that my words made an impact.
Thank you for the appreciation and yes, these are the last words of a chicken..
"Sirikkum Rojakkal Kooda Un Punnagaiyai Kandaal Sinthikkum Oru Nodi...! Indha Poo Nammai Vida Azhagaai Irukirathey Endru" So keep smiling my sweet friend.