Bhushavali
தல LK அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு சவால். என் சிறு முயற்சி...
A Challenge taken by Thala LK, a little trial from my side...


நான் இறந்து போயிருந்தேன்
அந்த கடவுள் என்னை நோக்கும் வரையில்

அந்த பயங்கர பூகம்பத்தில்,
சின்னாபின்னமான என் வீட்டின்
சிதிலங்களுக்கு நடுவில்
நான்கு நாட்கள்
நான் இறந்துதான் போயிருந்தேன்
கடவுள் ரூபத்தில்
அந்த வீரன் என்னை தூக்கும் வரையில்
இன்று -
அந்த மனித உருக்கொண்ட கடவுளால்
ஒரு மறுபிறவி கொண்டேன்!!!

Naan irandhu poyirundhen
Andha kadavul ennai nokkum varaiyil
Andha bayangara boogambathil,
Chinnabinnamana en veetin
Sithilangalukku naduvil
Naangu naatkal
Naan irandhudhaan poyirundhen
Kadavul roobathil
Andha veeran ennai thookum varaiyil
Indru -
Andha manidha urukkonda kadavulal
Oru marupiravi konden!!!
10 Responses
  1. அருமை தோழி ... உன்கிட்ட நான் போட்டி போட முடியுமா


  2. Vennimalai N Says:

    நெடு நாட்களாகிவிட்டது...
    இவ்வலைப்பூவின் இதழ்களில்
    பனி முத்துக்களாய் சிதறி தெரித்து,
    வாசிப்போரின் உள்ளத்தை வருடி தமிழினிமை கொடுத்து,

    ஆம்!

    நெடு நாட்களாகிவிட்டது!
    எம் தோழியின் கருத்துக்களும்,
    உணர்வுகளின் வெளிப்பாடுகளும்
    இவ்விடத்தில் வந்திறங்கி!

    மீண்டும் அருமை!
    மனிதத்தை உணர்ந்து,
    அம்மனிதம் நிச்சயமாய் இறைத்தன்மை அடையும்
    என்பதை உரைத்ததற்கு! வாழ்த்துக்கள்!


  3. Unknown Says:

    அருமையான கவிதை. இயல்பான நடை நன்றாக இருக்கிறது. உங்களுடைய நேரடி
    அனுபவம் போன்ற எண்ணத்தை, உங்கள் வார்த்தைகள் உருவாக்குகின்றன.
    வித்தியாசமான பார்வை கவிதையில் வெளிபப்டுகிறது.

    உங்களின் இந்த கவிதையை எங்களின் வலைப்பதிவிலும் வெளியீட்டுள்ளோம்.
    வாய்ப்பிருந்தால் வந்துப் பாருங்கள்.
    http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_08.html


  4. This comment has been removed by the author.

  5. அனைவர் வாழ்கையிலும் இது போல கடவுள்கள் உண்டு என்பதை எனக்கு வலியுறுத்துவதாக அமைகிறது இக்கவிதை.

    இது போல பல சவால்களை எடுத்துக்கொண்டு எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுகொள்கிறேன்!

    மிக்க நன்று தோழி ...


  6. Anand Says:

    Hey its really nice, I liked your entire blog. Keep on posting...!


  7. jemina Says:

    Just would like to say thank you for your wonderful comment at my blog dear

    Wishing you a lovely day

    Kisses
    Jemina
    xoxo


  8. teivam mansuya roopena...
    kalakara thozi, naan ketathukuku innum reply sollala aana.



  9. Anonymous Says:

    A very good way to commemorate the work of a rescuer. For those who he saves, he is a god in living form. Nice lyrics throughout blog. Keep writing.


Post a Comment