Bhushavali
ஸப்த ஸ்தானத்திலும் வீற்றிருக்கும் இறைவர் வாழ்த்த;
ஸப்த கன்னியரும் மாதமொருவராய் என்னைக் காக்க;
ஸப்த ரிஷிகளும் மாதமொருவராய் ஆசி வழங்க;
வானவில்லின் நிறங்கள் ஒவ்வொன்றாய் வாழ்விற்கு வண்ணம் சேர்க்க;
ஸப்த ஸ்வரங்களும் இதயத்திற்கு இசை கூட்ட;
ஜென்மங்கள் ஒவ்வொன்றும் மனம் குளிர்விக்க;
வள்ளல்கள் ஏழ்வரும் என் வாழ்வை வளமாக்க;
உலக அதிசயஙள் ஒவ்வொன்றும் என்னைச் சிலிர்ப்பூட்ட ;
கொலை பாதக பாவங்கள் தனித்தனியே விட்டு விலக;
குண்டலினிகள் ஒவ்வொன்றும் மனம் மகிழ்விக்க;
மணப்பெண் அடியெடுக்கும் சப்த பதிகளும் ஆசி கூற;
ஒரு கழுதையின் வயது வரை இதழ் புன்னகைக்க;
இந்த ஏழு மாதங்களும் ஏழு நொடிகளாய் கரையாதோ...???


Saptha sthanathilum veetrirukkum iraivar vazhtha;
Saptha kanniyarum maadhamoruvaraai ennaik kaakka;
Saptha rishigalum madhamoruvaraai aasi vazhanga;
Vaanavillin nirangal ovvondraai vazhvirkku vannam serkka;
Saptha swarangalum idhyathirkku isai koota;
Janmangal ovvondrum manam kulirnikka;
Vallalgal ezhuvarum en vaazhvai valamaakka;
Ulaga adhisayangal ovvondrum ennai silirpoota;
Kolai paadhaga vaavangal thanithaniye vittu vilaga;
Kundalinigal ovvondrum manam magizhvikka;
Manappen adiyedukkum saptha padhigalum aasi koora;
Oru kazhudhaiyin vayadhu varai idhazh punnagaikka;
Indha ezhu madhangalum ezhu nodigalaai karayaadho...???
Bhushavali
போட்டிகளில் வெல்வது சுகம்
ஆனால்,
ஓட்டப்பந்தயத்தில்
நான் காலத்தை தோற்கடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லைதான்
காலம் – என்னிடம் தோற்றதில்
அதற்கு மகிழ்ச்சி
- எல்லை கொள்ளா மகிழ்ச்சி
எனக்கோ……?
வெறுமையின் உச்சக்கட்டம்……
மனமென்னும் குரங்கின் சந்தேகங்கள் பற்பல
நான் முட்டாளா…???
காலத்தை தோற்கடிக்க முற்படுகிறேனா?
நிலைமை தொடர்ந்தால்
காலத்தை வென்று, காலனிடம் தோற்றால்…???
காலனை சிறு புல்லாய் தான் மதிக்கிறேன்
அவனை மிதிக்கிறேன்.
ஆனால்….,
மணி நேரங்கள் நிமிடமாகவும்
வருடங்கள் யுகங்களாகவும்
இருப்பதேன்…???

Potigalil velvadhu sugam
Aanal,
Otappandhayaththil
Naan kaalaththai thorkadipen endru edhirparkavillaidhan
Kaalam – Ennidam thotradhil
Adharku magizhchi
- Ellai Kolla magizhchi
Enakko……?
Verumaiyin uchchakkattam……
Manamennum Kurangin sandhegangal Parpala
Naan muttaala…???
Kaalaththai thorkadikka murpadugirena?
Nilaimai thodarndhal
Kaalaththai vendru, Kaalanidam thotral…???
Kaalanai chiru pullaai dhan madhikkiren
Avanai midhikkiren.
Aanaal….,
Mani nerangal nimidamagavum
Varudangal yugangalagavum
Iruppadhen…???

மீண்டும் பந்தயம்
பங்கேற்கலாமா…? வேண்டாமா…?
பங்கேற்காமலே இருந்து விடலாம் தான்…
காலத்தை தோற்க்கடித்து
காலனிடம் தோற்க விருப்பமில்லை…
ஆனால்…
பங்கேற்காமலே இருக்க
மனமென்னும் குரங்கு ஒத்துழைக்கவில்லையே…!!!

Meendum pandhayam
Pangerkalaamaa…? Veendama…?
Pangerkaamale irundhu vidalaam dhan…
Kaalathai thorkadithu
Kaalanidam thorka viruppamillai…
Aanal…
Pangerkaamale irukka
Manamennum kurangu oththuzhaikkavillaiye…!!!

அழகு… அளவு… காலம்…
மூன்றும் கூடினால் சுகம்
ஒன்றாயினும் பிரிந்தால் நரகம் தான்
அளவு…
காணாமல் போய்கொண்டு இருக்கிறது…
காலம்…
கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவில்லை…!!!
உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

பந்தயம்…
காலத்தை வெகுவாய் பின்னே தள்ளி வென்றுவிட்டேன்…
வெற்றி கண்டு விட்டேன்…

உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

இதழோரம் புன்னகை

Azhagu… Alavu… Kaalam…
Moondrum koodinaal sugam
Ondrayinum pirindhal naragam dhan
Alavu…
Kaanamal poikondu irukkiradhu…
Kaalam…
Kannukettum dhooram varai kaanavillai…!!!
Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Pandhyam…
Kaalathai veguvaai pinne thalli vendruvittean…
Vetri kandu vittean…

Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Idhazhoram punnagai
Bhushavali

ஒரு நன்னாளின் முடிவில்,
சோர்ந்து போய் இல்லம் திரும்பினேன்.
உடல் தளர்வை போக்க,
ஒரு குளிர் பானம்.
ஒரு மின் விசிறி.
மின் இயக்கம் தொடங்க ஒறு சிறு முயற்சி…???
மின் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்…!!!

Switch Board பக்கம் திரும்பினேன்.
அங்கிருந்த பல்லி என்னை நோக்கிற்று.
அன்னலும் நோக்க…
நானும் நோக்க…:-)

“உன் இல்லத்தினுள் நீ நுழைந்து விட்டாய்,
என் இல்லதினுள் நான் நுழைய வேண்டாமா…?”
பல்லி கேட்டது போல தோன்றிற்று… :-)

பல்லி தன் Switch Board இல்லதினுள் நோக்கிற்று
“நுழையலாமா…??? வேண்டாமா…???”
பல்லியின் எண்ண அலைகள்…
கடைசியில் என்னையும் ஓர் ஓரப்பார்வை பார்த்தது.
மின் விசிறி வேண்டிய, என் தவிப்பை நோக்கியது…
என் மீது பரிவோ, என்னவோ,
சென்றுவிட்டது… :-)

Oru nannalin mudivil,
Sorndhu poi illam thirumbiean.
Udal thalarvai pokka,
Oru kulir baanam.
Oru min visiri.
Min iyakkam thodanga oru siru muyarchi…???
Min inaippai earpaduththa veandum…!!!
Switch Board pakkam thirumbinean.
Angirundha palli ennai nokkitru.
Annalum nokka…
Naanum nokka…:-)
“Un illathinul nee nuzhaindhu vittai,
En illathinul naan nuzhaya vendaama…?”
Palli keatadhu pola thondritru… :-)
Palli than switch board illathinul nokkitru
“Nuzhayalaama…??? Veandama…???”
Palliyin enna alaigal…
Kadaisiyil ennaiyum or orappaarvai paarthadhu.
Min visiri veandiya, en thavippai nokkiyadhu…
En meedhu parivo, ennavo,
Sendruvittadhu… :-)
Bhushavali
கடமைகள்…… உரிமைகள்……
“ஒன்றின்றி மற்றொன்றில்லை…”
இது வெறும் கதை தானோ…
அல்லது கால மாற்றலில்,
“ஒருவர் இன்றி மற்றொறுவர் இல்லை…”
- என்றானதோ…???
நான் கடமைகளை நினைக்க,
உரிமைகளோ,
கண் காணாமல் போவதென்ன…???
உரிமைகளை நினைப்போரை,
கடமைகள்,
தீண்டவே இல்லையே…???

Kadamaigal…… Urimaigal……
“Ondrindri matrodrillai…”
Idhu verum kadhai dhaano…
Alladhu kaala maatralil,
“Oruvar indri matroruvar illai…”
- Endraanadho…???
Naan kadamaigalai ninaikka,
Urimaigalo,
Kan kaanaamal povadhenna…???
Urimaigalai ninaipporai,
Kadamaigal,
Theendave Illaiye…???

இவ்விடத்தில்,
நான் ஒரு மாற்றலில்…
எவ்விடத்திலும்,
நான் ஒரு மாற்றலில்……???

Ivvidathil,
Naan oru maatralil…
Evvidathilum,
Naan oru maatralil……???

Bhushavali
காலா,
உன்னைச் சிறு புல்லென மிதிக்க ஆசை,
ஆனால், என் சுற்றத்தார்,
உன் காலில் என்னை மிதிபட விட்டுவிடுவரோ…???

Kaala,
Unnai chiru pullena midhikka aasai,
Aanal, En Sutraththar,
Un kaalil ennai midhipada viduvaro…!!!

இந்த நொடியில்,
தனிமையில்,
என்ன செய்வதென்ற சிந்தனையில்,
நான் மட்டும் ஒரு மாறுதலாய்…
நான் என்னவென்று நானே அறியாமல்,
இங்கு ஏன் அமர்ந்துள்ளேன் என்று தெரியாமல்,
அறிவு மங்கும் வேளையில்,
காலச் சக்கரத்தை நோக்கினேன்…
ஒரு மணி நேரமாகி விட்டதை,
அந்த உண்மையை,
முகத்தில் அறைந்தற்ப்போல கூறுகிறது…
அறையின் தாக்கத்தை நன்றாக உணர முடிகிறது…
ஏன் இந்த நிலை………???

Indha nodiyil,
Thanimaiyil,
Enna seivadhendra chindhanaiyil,
Naan mattum oru maarudhalaai…
Naan ennavendru naane ariyamal,
Ingu ean amarndhullean endru theriyaamal,
Arivu magnum vealaiyil,
Kaalach chakkaraththai nokinean…
Oru mani nearamagi vittadhai,
Andha unmaiyai,
Mugathil araindharppola koorugiradhu…
Araiyin thaakaththai
Nandraga unara mudigiradhu…
Ean indha nilai………???

காலமே,
உன் நிலையோ பரிதாபம்…
அந்தோ.., உனைச் சீந்துவோரும் உளரோ..???
உண்டெனில்,
அவரை உன் முன் காலன் நோக்கும் பரிதாபமென்ன…???
உன்னைத் துளியும் எண்ணாதோர்
மகிழ்ச்சியில் திளைப்பதென்ன…???
உன் நிலையோ என் விழிக்கு பரிதாபம்…
உன் மீது பரிவு காட்டி,
மகிழ்ச்சியின் நோக்கில் நான் மறைவதென்ன…???
உன் நிழலில் நானே தூணாய் நிற்பதென்ன..?

Kaalame,
Un nilaiyo paridhabam…
Andho.., unaich cheendhuvorum ularo..???
Undenil,
Avarai un mun kaalan nokkum paridhabamenna…???
Unnaith thuliyum Ennadhor
Magizhchiyil thilaipadhenna…???
Un nilaiyo en vizhikku paridhabam…
Un meedhu parivu kaati,
Magizhchiyin nokkil naan maraivadhenna…???
Un nizhalil naane thoonai nirpadhenna..??
Bhushavali
பொங்கி எழும் பாலை
எப்படி நிறுத்துவது…?
தணலை குறைக்கலாம் தான்.,
ஆனால் அந்த பொங்கல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே.,
அதனை நிறுத்த வழி இல்லையா…???
தணலை அணைக்க முடியதா…???

Pongi ezhum paalai
Eppadi niruthuvadhu…?
Thanalai kuraikkalaam dhan.,
Aanaal andha pongal kattupaduthappatulathea.,
Adhanai nirutha vazhi illaiyaa…???
Thanalai anaikka mudiyadha…???

நட்பும் எதிராய்
நடப்பும் எதிராய்
பொங்கி எழுவதேன்
சினம் – அக்னிக்கடலாய்…

Natpum Edhirai
Nadappum Edhirai
Pongi ezhuvadhen
Sinam – Agnikkadalaai…

கடல் முழுதும்,
அக்னி அலைகள்…
மனம் முழுதும்,
சினத்தினலைகள்…

Kadal muzhudum, agni alaigal…
Manam muzhudum, sinathinalaigal…