Bhushavali
காலா,
உன்னைச் சிறு புல்லென மிதிக்க ஆசை,
ஆனால், என் சுற்றத்தார்,
உன் காலில் என்னை மிதிபட விட்டுவிடுவரோ…???

Kaala,
Unnai chiru pullena midhikka aasai,
Aanal, En Sutraththar,
Un kaalil ennai midhipada viduvaro…!!!

இந்த நொடியில்,
தனிமையில்,
என்ன செய்வதென்ற சிந்தனையில்,
நான் மட்டும் ஒரு மாறுதலாய்…
நான் என்னவென்று நானே அறியாமல்,
இங்கு ஏன் அமர்ந்துள்ளேன் என்று தெரியாமல்,
அறிவு மங்கும் வேளையில்,
காலச் சக்கரத்தை நோக்கினேன்…
ஒரு மணி நேரமாகி விட்டதை,
அந்த உண்மையை,
முகத்தில் அறைந்தற்ப்போல கூறுகிறது…
அறையின் தாக்கத்தை நன்றாக உணர முடிகிறது…
ஏன் இந்த நிலை………???

Indha nodiyil,
Thanimaiyil,
Enna seivadhendra chindhanaiyil,
Naan mattum oru maarudhalaai…
Naan ennavendru naane ariyamal,
Ingu ean amarndhullean endru theriyaamal,
Arivu magnum vealaiyil,
Kaalach chakkaraththai nokinean…
Oru mani nearamagi vittadhai,
Andha unmaiyai,
Mugathil araindharppola koorugiradhu…
Araiyin thaakaththai
Nandraga unara mudigiradhu…
Ean indha nilai………???

காலமே,
உன் நிலையோ பரிதாபம்…
அந்தோ.., உனைச் சீந்துவோரும் உளரோ..???
உண்டெனில்,
அவரை உன் முன் காலன் நோக்கும் பரிதாபமென்ன…???
உன்னைத் துளியும் எண்ணாதோர்
மகிழ்ச்சியில் திளைப்பதென்ன…???
உன் நிலையோ என் விழிக்கு பரிதாபம்…
உன் மீது பரிவு காட்டி,
மகிழ்ச்சியின் நோக்கில் நான் மறைவதென்ன…???
உன் நிழலில் நானே தூணாய் நிற்பதென்ன..?

Kaalame,
Un nilaiyo paridhabam…
Andho.., unaich cheendhuvorum ularo..???
Undenil,
Avarai un mun kaalan nokkum paridhabamenna…???
Unnaith thuliyum Ennadhor
Magizhchiyil thilaipadhenna…???
Un nilaiyo en vizhikku paridhabam…
Un meedhu parivu kaati,
Magizhchiyin nokkil naan maraivadhenna…???
Un nizhalil naane thoonai nirpadhenna..??
2 Responses
  1. Vennimalai N Says:

    Priyamanathozhi,
    I was not able to understand the core of this..
    Do you mean to say that
    "உன் காலில் என்னை..."
    or
    "என் காலில் உன்னை..."

    Please explain!


  2. Bhushavali Says:

    அண்ணா,
    "உன் காலில் என்னை..." - அதாவது, "என் சுற்றத்தார் என்னை துன்புறுத்துகையில், காலன் காலில் மாட்டிவிடுவேனோ" - எனப் பொருள்.


Post a Comment