Bhushavali N
விடியற்காலை மணி ஆறு...
பொழுது அழகாய், பொறுமையாய் புலர்கிறது...
வானம் கரு நீலத்திலிருந்து,
ஒளிர் நீலமாய் மாறுகிறது...
நிழலாய் நின்ற பனையும், தென்னையும்,
பச்சையாய் உருவெடுக்கின்றன...

பூட்டு திறந்து, கதவுகளை நீக்கும் சப்தமும்,
வாசலில் நீர் தெளிக்கும் சப்தமும்,
வாசல் பெருக்கும் சப்தமும்,
ஒருங்கிணைந்து சூரியனை வரவேற்றன...

அந்நேரத்தில், இத்தகைய பொன் நேரத்தில்,
ரயில் நிலையத்தில், நான்...
என்னைச் சுற்றி, பற்பல மக்கள்...

பயணச்சீட்டு வாங்குவதும்,
செய்திப்பலகையை படிப்பதும்,
கடிகாரத்தை காண்பதும்,
குழந்தைகளை அடக்கும் பெற்றோரும்,
ஆட்டோக்களோடு காத்திருக்கும் ஓட்டுனர்களும்,
வழி மீது விழி வைக்கும், அழைக்க வந்தோரும்,
விழிகளில் ஏக்கத்துடன் வழியனுப்ப வந்தோரும்,
கயற்கண்களில் கனவுடன் கல்லூரிக்கு செல்வோரும்,
வருமானம் எண்ணி அலையும் பெரியோரும்,
எங்கு காணிணும் மக்கள் பலவிதம்...
அவர்களோடு ஒருவராய் நானும்...

மூச்சுடன் கலக்கும் தூய உயிர்வளியை உள்ளிழுத்து,
சுற்றும் உள்ள மக்களின் ஓயாப்பேச்சினைக் கேட்டு,
விழிகளில் நிறையும் சூரியனின் ஒளிக்கதிர்களை ஏந்தி,
கைய்யில் நோட்டுடன், பேனாவுடன்,
எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றும்,
ஒரு சிறு முயற்சியில்.......


Vidiyarkkaalai mani aaru...
Pozhudhu azhagaay, porumaiyaay pulargiradhu...
Vaanam karu niilaththilirundhu,
Olir niilamaay maarugiradhu...
Nizhalaay nindra panaiyum, thennaiyum,
Pachchaiyaay uruvedukkindrana...

Puuttu thirandhu, kadhavugalai niikkum sapthamum,
Vaasalil niir thelikkum sapthamum,
Vaasal perukkum sapthamum,
Orungginaindhu suuriyanai varavetrana...

Anneraththil, iththagaiya pon neraththil,
Rayil nilaiyaththil, naan...
Ennai chuttri, parppala makkal...

Payanachchiittu vaanguvadhum,
Cheydhippalagaiyai padippadhum,
Kadikaaraththai kaanbadhum,
Kuzhandhaigalai adakkum petrorum,
Autokkalodu kaaththirukkum oottunargalum,
Vazhi miidhu vizhi vaikkum, azhaikka vandhorum,
Vizhigalil ekkaththudan vazhiyanuppa vandhorum,
Kayarkangalil kanavudan kalloorikku selvorum,
Varumaanam enni alaiyum periyorum,
Engu kaaninum makkal palavidham...
Avargalodu oruvaraay naanum...

Muchudan kalakkum thuuya uyirvaliyai ullizhuthu,
Suttrum ulla makkalin oyaappechchinaik kettu,
Vizhigalil niraiyum suriyanin olikkadhirgalai endhi,
Kaiyyil notetudan, penaavudan,
Ennangalai ezhuththukkalaay maatrum,
Oru siru muyarchiyil.......
7 Responses
 1. Vennimalai N Says:

  தங்களின் மடக்கிய உரைநடையில்,
  தெளிந்த கவிதை ஓடையில்,
  முத்து முத்தான பொற்காலைப்பொழுதும்,
  அச்சூழ்நிலை விளக்கமும்,

  அப்பப்பா!!
  என் அந்திமாலையில்,
  மனதுக்கு விருந்தாய்- அந்த கற்பனையே
  இந்த நகர இரைச்சல்நோய்க்கு மருந்தாய்...

  தோழியே, மிக்க நன்றி!!


 2. seenu Says:

  nicely written .. keep it up...

  and எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றினீர்களா??


 3. அண்ணா, நன்றி...

  ஸ்ரீனி, எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றியதைத்தான் இங்கு எழுதியுள்ளேன்.


 4. Srinivasan Says:

  hey... btw nice template...


 5. Thanks Srinivasan :)


 6. Sowmi Says:

  அருமை. இதற்கு தன ஆங்கிலத்தில் People watching என்று கூறுவார்கள்.எனக்கு உனது கவிதைகள் என்றால் ப்ரியம் :) Btw your blog template is beautiful.. what's the tamil word for that??? I suck in tamil right??


 7. @Sowmi

  Thanks da...
  Blog page is genereally referred to as வலைப்பக்கம் or வலைப்பூ. வலைப்பக்கம் is actually webpage, and 'வலைப்பூ' is blog. But both are used. Blog template must be வலைப்பூ பின்ன்ணி or வலைப்பூ பின் திரை... We've gotta develop it...
  And don't worry, it will improve...


Post a Comment