சலசலவென்ற இலைகளின் படபடப்பில்,
சிலுசிலுவென்ற காற்று.
கருகருவென்ற மேக மூட்டத்தில்,
குயில்களின் கூகூவென்ற பாட்டு.
நெடுநெடுவென்ற வேப்பமரத்தில்,
கண்ணங்கரேலென்ற காகங்களின் கூத்து.
முதுகில் முக்கோடுகள் கொண்டு,
குடுகுடுவென்று ஓடி விளையாடும் அணில்.
திருதிருவென்று முழிக்கும் குழந்தைகளைப் பற்றும்
அன்பிற்க்குரிய தாய்களின் பாசம்.
கிடுகிடுவென சளைக்காமல் உணவு தேடும்
சிறுசிறு பிள்ளையார் எறும்புகள்.
கிணிகிணி என்ற மணியின் சப்தத்தோடு,
மந்திரம் ஜபிக்கும் கோயில் குருக்கள்.
எல்லாம் இணைந்த கோவில்
இதயத்திற்கு அமைதி சேர்க்குமாம்.
Salasalavendra ilaigalin padapadappil
Silusiluvendra kaatru.
Karukaruvendra mega muuttaththil, kuyilgalin
Kuukuuvendra paattu.
Neduneduvendra veppamaraththil,
Kannanggarelendra kaaganggalin kuuththu.
Mudhugil mukkodugal kondu,
Kudukuduvendru odi vilaiyaadum anil.
Thiruthiruvendru muzhikkum kuzhandhaigalai patrum
Anbirkkuriya thaaygalin paasam.
Kidukiduvena salaikkaamal unavu thedum
Sirusiru pillaiyaar erumbugal.
Kinikini endra maniyin sapdhaththoodu, mandhiram
Jabikkum koyil kurukkal.
Ellaam inaindha kovil idhayaththirku
Amaidhi serkkumaam.
அடுக்கு தொடர்களும் இரட்டை கிளவிகளும் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றன உந்தன் அருமையான கவிதையில். சொக்குதே மனம் :)
you taking back to my school days with ur poems,wonderful!
@Sowmi,
Thanks da sweety...
@Cynthia,
Thanks dear... :)
நன்கு உரைத்தாய் பிரியமான தோழியே,
ஆனால் அமைதி காக்கவேண்டிய இடத்தில்
புளிக்குழம்பு வைத்தது முதல்
அக்னி நட்சத்திரப்புழுக்கம் வரை
சில பலர் தம் ஆழ்ந்த
சொந்த விஷயங்கள் மட்டுமே பேசி,
அந்த அமைதியை
வெகுவாக சீர்குலைக்கின்றனரே?!
அண்ணா,
அதுவும் உண்மைதான்... நானும் அவற்றை சந்தித்தேன்.
குருட்டுப் பார்வையும், செவிட்டு கேட்டலையும் கொடுத்து வந்தேன்.
Your poems are nice. We must all struggle to bring peace to this world in whatever ways we can. Good work!
Thank you Fiaz and Welcome to my blog... :)
இரட்டைக்கிளவிகளும் குமரிகளாக இருக்கின்றன உன் கவிதையில். BTW கவிதைதானே அது!!
@ Nags,
நீங்கள் தான் கூற வேண்டும்.... இது கவிதையா, இல்லை உடைந்த உரைநடையா என்று..????
"எல்லாம் நிறைந்த கோயில் மனதுக்கு அமைதி சேர்க்குமாம்"
சேர்க்கும். நான் உணர்ந்திருக்கிறேன். உண்மை என்னவெனில் அமைதி சந்தங்களுக்கு மத்தியில் தான் இருக்கிறது. நாம் தான் சத்தங்களால் கவனம் சிதறி, அமைதியை அடையாளம் காண்பதில்லை.
Silence is Shiva. Sound is Shakthi. Both are inseperable.- I learnt this from Swami Akshara.
Hi Ramesh,
Welcome to my blog... Thanks for dropping in and commenting..
Yes, I've felt it several times... This poem is one such expression of a fine sunday evening spent peacefully, in the midst of spirituality and nature at a temple...
Do drop in often...
Really nice and comment by Ramesh is also nice...
Hi Murugadas,
Thanks dear.
Do drop in often...