என் நெஞ்சில் இலையுதிர் காலம்...
ஒலி ஏந்திய இடங்களில் நிசப்தம்...
தனியாக ஒரு பயணம்..??? - இல்லை
தனிமையில் ஒரு பயணம்.
மனத்தின் அலைகளின் அடக்கம்,
உடலின் செல்களில் குடியேறும்.
ஒவ்வொன்றாய் அது அடங்க,
எதிர்ப்பார்ப்புகள் தானாய் அடங்கும்.
இலைகள் உதிரத் துவங்க,
உதிறமும் உதிர்த் துவங்க,
துவண்டு போன மனத்தினை
யாரும் தூக்கி நிறுத்துவோரும் உளரோ..???
பிரிவினால் வரும் வலியைக் காட்டிலும்
தனிமையின் வலி கொடியதடா...
நீ இன்றி நான் இங்கு இருப்பது
நீரின்றி மீனிருப்பதைப் போலாகுமடா...
அனைவரும் சூழ்ந்திருக்க
இங்கு தனிமையில் வதங்கி
இலைகள் உதிர்ந்து, அலைகள் அடங்கி,
வழியோடு விழி வைத்து
உன்னை எதிர்நோக்கி நான்...
En nenjil ilaiyudhir kaalam...
Oli endhiya idangalil nisaptham...
Thaniyaaga oru payanam..??? - Illai
Thanimaiyil oru payanam.
Manaththin alaigalin adakkam,
Udalin selgaLil kudiyeeRum.
Ovvondraay adhu adangga,
Edhirppaarppugal thaanaay adanggum.
Ilaigal udhirath thuvangga,
Udhiramum udhirth thuvangga,
Thuvandu poona manaththinai
Yaarum thookki niruththuvoorum uLaroo..???
Pirivinaal varum valiyai kaattilum
Thanimaiyin vali kodiyadhadaa...
Nii indri naan inggu iruppadhu
Neerindri meeniruppadhai polaagumadaa...
Anaivarum suzhndhirukka
Ingu thanimaiyil vadhangi
Ilaigal udhirndhu, alaigal adangi,
Vazhiyodu vizhi vaiththu
Unnai edhirnokki naan...
How true!!! I was having the same feel for past 3 to 4 days... Even when all are surrounded, a loneliness is creeping in... Wow! Thank You :) for putting this as a beautiful poem...
தாமதமாய் வந்தாலும்
தனிமையின் தவிப்பை
தத்ரூபமாய் தெளித்திருக்கும்
தோழியே!,
தாங்கள்,
மீண்டு(ம்) வந்ததுவும்,
வருவதுவும் குறித்து, வாழ்த்துக்கள்!!
@Sowmi, thanks dear..
@Anna, :)
தமிழில் நானும் எழுதலாமா இந்த அழகான கவிதைக்கு ஓர் விமர்சனத்தை? :) நீண்ட நாளுக்கு பிறகு எனது அனுபவம் தமிழில் எழுதுவது :)
மிக மிக அழகான கவிதை இது. தனிமையை மிக அருமையாக கவிதை வடிவத்தில் விளக்கி உள்ளாய் :) உனது அன்புதோழி சௌமியா :)
தோழியே,
தங்களது, இந்த வலைப்பூவின்
புதிய தோற்றமும், அமைப்பும்,
...
....
....
...
....
....
மெய்யாலுமே
டக்கராக்கீதும்மெ!
Anna
Thankuuu..... Btw, unga profile pic photoshop velaya illai, Jaydeep Sir kaivannama...???
hello mitr-friend,this is such a nice poem which reflects the loneliness dat dwells in everyones life at the end of the day,kudos to u.very nice blog.
Hi Cynthia, Welcome to my blog. And thanks for the comment. Do drop in often too...