Bhushavali
வாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... 
நவரசமும் ஒவ்வொன்றாய், 
ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்...  

என் வாழ்க்கை கலந்திருந்தாலும், 
சிரிப்பிற்கு, 
அழகிய உவமையாய் நின்ற 
அந்நிகழ்ச்சியை, 
நண்பனாய் நின்ற உன்னிடம், 
உன்னை நம்பிக் கூறினேன். 
இதை சிரிப்போடு சிரிப்பாய் 
நீ எவரிடமும் கூறினாலும், 
என் பெயரை கூறமாட்டாய் 
என்ற நம்பிக்கையில்...  

அந்த நம்பிக்கையை ஏன் சீரழித்து 
சின்னாபின்னமாக்கினாய்...??? 
என் பெயரை ஏன் மொழிந்த்தாய்...??? 
என் மன உளைச்சலை,
நீ இப்போதெப்படி களைவாய்..?????


Vaazhkkaiyil parpala nigazhchchigal... 
Navarasamum ovvondraay, 
Ovvoru nodiyum ettippaarkkum...  

En vaazhkkai kalandhirundhaalum, 
Sirippirku, 
Azhagiya uvamaiyaay nindra 
Annigazhchchiyai, 
Nanbanaay nindra unnidam, 
Unnai nambi kurinen. 
Idhai sirippodu sirippaay nii 
Evaridamum kuurinaalum, 
En peyarai kuuramaattaay  
Endra nambikkaiyil...  

Andha nambikkaiyai een siirazhiththu 
Chinnaabinnamaakkinaay...??? 
En peyarai een mozhindhaay...??? 
En mana ulaichchalai, 
Nii ippodheppadi kalaivaay..?????
Bhushavali
உன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன.? 
உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன.? 
உன் வீடு தான் இங்கிருக்கிறதே, உனக்கென்ன.? 
உன் சம்பளம் தான் இவ்வளவாயிற்றே, உனக்கென்ன.?  

நீ கேட்ட இந்த கேள்விகள் அனைத்தையும், 
மனத்தின் ஆழத்தில் தள்ளி பூட்டி விட்டேன். 
இதழோரம் புன்னகை பூத்து விட்டேன்.  

இன்றோ நீ, 
உனக்கு தான் தினமும் நல்ல உணவு கிடைக்கிறதே.? 
உன் உணவு தான் சத்தானதாயிற்றே.? 
இப்படியும் உன்னிடமிருந்து கேள்விகள்.  

இதை ஒரு உணவற்ற ஏழை கேட்டிருந்தால், 
எண்ணங்கள் வெறு திசை சென்றிருக்கும். 
நீ ஏன் கேட்டாய்.?  

மனிதா,
'உணவுக்குக் கூட கண் வைத்தால் 
அது செரிக்குமா.?' - என சிலர் கேட்பர். 
என்னைப் பொருத்த மட்டில், 
என் வயிற்றில், 
அது செரிக்கும், நன்றாகவே செரிக்கும்.  

ஆனால், 
என் மனதிலோ, 
சுற்றமாய் நின்ற நீ, 
நண்பனாய் செரிக்காமல், 
யாரோ ஒரு மனிதனாய் 
உருமாறிவிட்டாய்...


Un kulam dhaan idhuvaayitre, unakkenna.? 
Un thandhai dhaan ivaraayitre, unakkenna.? 
Un thaay dhaan ivaraayitre, unakkenna.? 
Un veedu dhaan ingirukkiradhe, unakkenna.? 
Un sambalam dhaan ivvalavaayitre, unakkenna.?  

Nii ketta indha keelvigaL anaiththaiyum, 
Manathin aazhaththil thalli pootti vitten. 
Idhazhoram punnagai pooththu vitten.  

Indro nii, 
Unakku dhaan dhinamum nalla unavu kidaikkiradhee.? 
Un unavu dhaan saththaanadhaayire.?
Ippadiyum unnidamirundhu kelvigal.  

Idhai oru unavatra ezhai kettirundhaal, 
EnnanggaL veru dhisai sendrirukkum. 
Nii en kettaay.?  

Manidhaa, 
'Unavukku kooda kan vaithaal 
Adhu serikkumaa.?' - ena silar ketpar. 
Ennai poruththa mattil, 
En vayitril, 
Adhu serikkum, nandragave serikkum.  

Aanaal, 
En manadhilo, 
Sutramaay nindra nii, 
Nanbanaay serikkaamal,
Yaaro oru manidhanaay 
Urumaarivittaay...