Bhushavali
எனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி...
Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first effort of mine..

அவசரமான வேலை,
பஸ் கிடைக்கவில்லை,
நடக்கத் தொடங்கினேன்.
லதா ஒரு பேனா கேட்டாளே
கடைக்குள் நுழைந்தேன்...

வந்தான் ஒரு சிறுவன்
பங்கஜம்மாளின் பேரன்
வாங்கினான் ஒரு கோகோ கோலா
பேரம் பேச வில்லையே.
நேற்று பங்கஜம்மாள்
கீரைக்காரியிடம், மூன்று ரூபாய் கீரைக் கட்டை
இரண்டரை ரூபாய்க்கு பேரம் பேசினாளே!
சிரித்துக்கொண்டேன்...

சிறுவயதில்,
பனை ஓலையில் காற்றாடி செய்து
பூவரச இலையில் ஊதல் செய்து
விளையாடினோமே!
ம்! இன்று
அந்த ஆக்கத்தை, ஏப்பம் விட்டு விட்டதா,
இந்தக் கடையில் உள்ள பார்பி பொம்மைகள்?

60 வயது கிழவனும் தன்
80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
அன்னையர் தினம் எந்நாளும்...
அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
அதற்கேன் வாழ்த்தட்டை.?
அதை ஏன் வாங்கினாள் டீனா.?
தொடர்ந்தேன்.

வழியில் டீ.வீ கடை,
வாசலில் இளைஞர்கள் கும்பல்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி ஆட்டமாம்...
படிக்கும் வயதில் விளையாடலாம்,
தலைவனாகக் கனவு கானலாம்,
அடிமையாகலாமா.?
அதுவும் கிரிகெட்டிற்கு.?

சிறிது தூரத்தில் ஒரு குயவன்
குடை பிடித்திருந்தான்,பனை ஓலையால்...
பக்கத்துக் கடையில் கொத்துக் கொத்தாய்,
திராட்சை அல்ல,
பிளாஸ்டிக் குடங்கள்...

நடந்ததால் கால் வலித்தது,
ஆனால் உண்மை புரிந்தது,
என் அவசர வேலையினும்
அவசரத் தேவை,
உலகமயமாக்கல் எதிர்ப்பு...!!!

Avasaramaana velai
Bus kidaikkavillai,
Nadakkath thuvanginen,
Latha oru pena kettale,
Kadaikkul nuzhaindhen.
Vandhaan oru siruvan,
Pankajammalin peran,
Vaanginaan oru Cococola,
Beram peasavillaye,
Netru, Pankajammal,
Keeraikkaariyidam moondru roobaai keeraikkattai
Irandarai roobaaikku beram pesinaale,
Siriththukkonden...!

Siruvayadhil,
Panai olaiyil kaatraadi seidhu,
Poovarasa ilaiyil oodhal seidhu,
Vilaiyaadinome,
M! Indru
Andha aakkaththai eppam vittu vittadha
Indhakk kadayilulla Barbie bommaigal.?

60 vayadhu kizhavanum than
80 vayadhu thaayai kaappatrum innattil
Annayar dhinam ennalum
Adharkedharkku oru naal kondaatam?
Adharkken vaazhthattai?
Adhai yen vaanginaal Tina.?

Thodarndhen
Vazhiyil t.v. kadai,
Vaasalil ilainyargal gumbal
India Pakistan irudhi aatamaam..
Padikkum vayadhil vilayaadalam,
Thalaivanaaga kanavu kaanalaam,
Adimayaagalaama,
Adhuvum Cricketirkku.?

Siridhu dhoorathil oru kuyavan,
Kudai pidiththirundhaan,
Panai olayaal.
Pakkathuk kadayil kothukoththaai,
Thratchai alla,
Plastic kudangal...

Nadandhadhaal, kvaliththadhu,
Aanal unmai purindhadhu.
En avasara velayinum,
Avasaraththevai,
Ulagamayamaakkal edhirppu...
12 Responses
  1. Arun Says:

    ப்ரியமான தோழி!

    நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! :)

    "அடிமையாகலாமா?
    அதுவும் கிரிக்கெட்டிற்கு?
    " என்ற வரிகளில் "அதுவும்" என்ற சொல்லில் உள்ள எள்ளலை மிகவும் ரசித்தேன்.

    ஆயினும், "உலகமயமாக்கல் எதிர்ப்பு" என்ற ஒற்றை வரிச் சிந்தனை சற்றே ஆபத்தானதாக இருக்குமோ என்றே தோன்றுகிறது. "உலகமயமாக்கல்" என்கிற நிகழ்வு ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகி விட்ட நிலையில், அதனை முற்றிலும் எதிர்ப்பதைக் காட்டிலும், அதிலுள்ள நல்ல விஷயங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளவும், தீயவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் இயன்ற வழியைப் பார்ப்பதே அறிவுடைமையாகத் தோன்றுகிறது.


  2. Bhushavali Says:

    நன்றி Arun நண்பரே...
    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ள்ல் என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப, முற்றிலும் எதிர்த்தால் தானே ஏதாவது நிகழும்.!

    தங்களுடைய Blogpage எதுவோ.??? Profile காண முடியவில்லையே...


  3. Arun Says:

    "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற சொல்படி செய்வதென்றால், உலகமயமாக்கலின் வெளிப்பாடுகளை மேன்மையான முறையில் பயன்படுத்துவது எப்படி என்றும் கூட சிந்திக்கலாமே! அதுவும் கூட உயர்வுள்ளல் தானே! :)

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை ஒரு சித்தாந்தமாக மட்டுமல்லாது, ஒரு வாழ்வு முறையாகவே கூட இன்று ஏற்க முடியுமென்றால் அது உலகமயமாக்கலின் ஒரு வெளிப்பாடே!

    எனக்கு இவ்வாறு சிந்திக்கத் தோன்றுகிறது: அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் நிகழ்ந்துவந்த பனிப்போரின் இறுதியில், சோவியத் யூனியன் சிதைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதலாளித்துவ உலகமயமாக்கல் (capitalistic globalisation) வென்றது.

    ஒருவேளை இவ்வாறு நிகழ்ந்திருக்காவிட்டால், வேறொரு வகையான பொதுவுடைமை-நோக்கு உலகமயமாக்கல் நிகழ்ந்திருக்கலாம் (a socialist-communist globalisation, wherein the whole world could have been seen as one homogenous 'community'—and hence the name 'communist', as against as one marketplace under the capitalistic globalisation currently in vogue). அப்படி நிகழ்ந்திருந்தால், அது இப்போதிருப்பது போன்ற சந்தைசார் பொருளாதார உலகமயமாக்கலாக (market-based economic globalisation) இல்லாது, வேறு வகையாகவே இருந்திருக்கும். ஆயினும், அதுவும் உலகமயமாக்கல் என்றே வழங்கப்பெற்றிருக்கும்.

    அது போலவே, இந்தியா, சீனா, போன்ற கீழ்த்திசை நாடுகளின் சித்தாந்தங்களின், தத்துவங்களின் வாயிலாக ஒரு வகை உலகமயமாக்கல் நிகழ்ந்திருந்தால், அது ஓர் ஆன்மீக உலகமயமாக்கலாக (spiritual globalisation) இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    ஆக, உலகமயமாக்கல் என்ற ஒன்றே தவறென்று சொல்லிவிடுவதற்கில்லை என்பதே நான் இங்கு கூற வருவது.

    (தெளிவா குழப்பிட்டேனோ?!)
    :)


  4. Arun Says:

    வலைப்பக்கம் இன்னும் துவங்கவில்லை. தொடர்ச்சியாகப் பதிவுகள் எழுதுவதற்கு நேரம் கிடைக்குமாவென்று தெரியவில்லை. துவங்கினால் தெரிவிக்கிறேன். :)


  5. Bhushavali Says:

    Dear Arun, why dont u enable ur 'Show my profile' option...


  6. Bhushavali Says:

    Dear Arun,

    Just as u say, this Capitalistic globalisation is what I hate. Life has become too complex and too open because of the western 'culture'... (I doubt if they have one..!!! :D) The thing called self suffieciency is gone... Life was simple and happy without them. All relatives and friends around. If I was doing farming, my neighbour would be weaving and my relative would be a maison. Life would have been simple . We would have been so immune without burgers and pizzas. Our own siddha medicine would have been enough to treat the diseases which hardly find place to attack. Computers, mobiles would have been unnecessary as all communications were done verbal as all our friends and relatives would be maximum in the next village. Without cars and bikes air and water would be sparkling.. Tell me Arun, when was the last time you saw sparkling water which is direct from nature (untreated). Its been years since I had seen. Without tvs ans x boxs we would have got valuable time to spend with family. Gyms would have not been needed with regular hard work at farms, looms, homes.

    On the whole, though in the outer circle we seemed to have gained a lot, in the inner meaning haven't we lost way too much.....?????

    Now we are again slaves of the US, and EU. We work when then work. In the sense we work in our night at BPOs, IT, Textile Export fields when its their morning. They have nothing inhouse. Everything is outsourced from Asia. They are so much dependent on us. So shouldn't it be the other way round. That they sit up in their nights for us to work in our mornings.

    Know what, if all our imports and exports come to stand still we can still survive. Coz, we have everything inhouse. Till date, we have our farmers, weavers etc. But are losing our innate talents day by day. Which is a serious alarming situation.

    That is why i hate Globalization. Its taking a toll of out innate capacities and making us numd and dumb.


  7. Arun Says:

    //Dear Arun, why dont u enable ur 'Show my profile' option... //

    Okay, done.


  8. Arun Says:

    //Just as u say, this Capitalistic globalisation is what I hate. Life has become too complex and too open because of the western 'culture'... (I doubt if they have one..!!! :D)//

    While I agree with you on the overall, I have to point out that this could not have happened without our own permission, at some level. oosi idam kodukkaamal nool nuzhaiya mudiyaadhu.

    The point you are missing here is, just like how good Indian movies are usually not the ones that get released internationally whereas crappy masala movies do, the same way, what we get to see as "Western culture" is only the pedestrian "mass" variety there.

    Take music, for example. Pop music is not the West's answer to Carnatic music; Western classical music IS. But tell me, how much of Western classical do you get to hear? Will it be fair if somebody passed a judgement on Indian music after listening to some dappaankuththu songs? Compare 'class' with 'class'; and 'mass' with 'mass'; else, you would be comparing apples with oranges.

    What you see in call centres and BPOs DOES NOT represent their culture or values, though that is the picture our own "Indian" brothers and sisters working in call centres and BPOs give us.

    Just as they say, "alcohol does not MAKE one bad; it only brings out what was already inside", globalisation in itself primarily magnifies things manifold, and creates opportunities. How you use these opportunities is, to a great extent, up to you.

    I wouldn't buy the argument that BPOs and call centres have made us so. Under the earlier socialist regime, when people were struggling with unemployment and other such problems, they just couldn't afford an amoral lifestyle, so they kept to themselves; now, when they have the opportunity, they go berserk. If these people had strong values, a call centre or a BPO cannot change them SO much.

    And, globalisation had nothing to do with cricket. That, we had inherited from the British more than 200 years ago; globalisation is a much more recent phenomenon. I understand your angst (and share much of it, too), but I think, it might be a better idea to focus it not on the phenonmenon of globalisation itself but on the lack of self-respect and self-restraint in many of our own brothers and sisters, hard though it may be.


  9. Bhushavali Says:

    I am not confining things to BPO alone. Its just an example of the re-entry of slavery. Like how we lose our natural sleep pattern so as to make living comfortable for them.

    And ya, abt cricket. Generally we tend to accept cricket as gentlemen game and gilli as local villager game 'graamathu vilayaattu' or 'kaattan vilayaatu'. Where as there is no difference. Just that we accept the same game as a class apart when it is inherited from abroad...
    Just as you say, it was definetely our mistake to glorify the western stuff and call our own things as uncivilized....


  10. Anonymous Says:

    Every change brings it with set of good n bad..and we tend to overlook those since we tend to like the changes in our life.I would say anything with in limits does no harm to anyone..just a question of how much we want it and how much we take it from globalization.


  11. Bhushavali Says:

    Dear VB,
    We seem to have gone far leaving back our traditions and innate skills due to and in the name of globalization. We need to come back a little or atleast stop adapting anymore so as to preserve our individuality.


  12. I enjoyed this very much.

    If this was published in Gokulam , you must have been just a child when you wrote this. Such maturity of thought.
    60 வயது கிழவனும் தன்
    80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
    அன்னையர் தினம் எந்நாளும்...
    அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
    Beautiful.

    I look forward to reading your other poems, too.

    And thanks for visiting my blog.


Post a Comment