எனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி...
Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first effort of mine..
அவசரமான வேலை,
பஸ் கிடைக்கவில்லை,
நடக்கத் தொடங்கினேன்.
லதா ஒரு பேனா கேட்டாளே
கடைக்குள் நுழைந்தேன்...
வந்தான் ஒரு சிறுவன்
பங்கஜம்மாளின் பேரன்
வாங்கினான் ஒரு கோகோ கோலா
பேரம் பேச வில்லையே.
நேற்று பங்கஜம்மாள்
கீரைக்காரியிடம், மூன்று ரூபாய் கீரைக் கட்டை
இரண்டரை ரூபாய்க்கு பேரம் பேசினாளே!
சிரித்துக்கொண்டேன்...
சிறுவயதில்,
பனை ஓலையில் காற்றாடி செய்து
பூவரச இலையில் ஊதல் செய்து
விளையாடினோமே!
ம்! இன்று
அந்த ஆக்கத்தை, ஏப்பம் விட்டு விட்டதா,
இந்தக் கடையில் உள்ள பார்பி பொம்மைகள்?
60 வயது கிழவனும் தன்
80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
அன்னையர் தினம் எந்நாளும்...
அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
அதற்கேன் வாழ்த்தட்டை.?
அதை ஏன் வாங்கினாள் டீனா.?
Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first effort of mine..
அவசரமான வேலை,
பஸ் கிடைக்கவில்லை,
நடக்கத் தொடங்கினேன்.
லதா ஒரு பேனா கேட்டாளே
கடைக்குள் நுழைந்தேன்...
வந்தான் ஒரு சிறுவன்
பங்கஜம்மாளின் பேரன்
வாங்கினான் ஒரு கோகோ கோலா
பேரம் பேச வில்லையே.
நேற்று பங்கஜம்மாள்
கீரைக்காரியிடம், மூன்று ரூபாய் கீரைக் கட்டை
இரண்டரை ரூபாய்க்கு பேரம் பேசினாளே!
சிரித்துக்கொண்டேன்...
சிறுவயதில்,
பனை ஓலையில் காற்றாடி செய்து
பூவரச இலையில் ஊதல் செய்து
விளையாடினோமே!
ம்! இன்று
அந்த ஆக்கத்தை, ஏப்பம் விட்டு விட்டதா,
இந்தக் கடையில் உள்ள பார்பி பொம்மைகள்?
60 வயது கிழவனும் தன்
80 வயது தாயைக் காப்பாற்றும் இந்நாட்டில்,
அன்னையர் தினம் எந்நாளும்...
அதற்கெதற்கு ஒரு நாள் கொண்டாட்டம்,?
அதற்கேன் வாழ்த்தட்டை.?
அதை ஏன் வாங்கினாள் டீனா.?
தொடர்ந்தேன்.
வழியில் டீ.வீ கடை,
வாசலில் இளைஞர்கள் கும்பல்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி ஆட்டமாம்...
படிக்கும் வயதில் விளையாடலாம்,
தலைவனாகக் கனவு கானலாம்,
அடிமையாகலாமா.?
அதுவும் கிரிகெட்டிற்கு.?
சிறிது தூரத்தில் ஒரு குயவன்
குடை பிடித்திருந்தான்,பனை ஓலையால்...
பக்கத்துக் கடையில் கொத்துக் கொத்தாய்,
திராட்சை அல்ல,
பிளாஸ்டிக் குடங்கள்...
நடந்ததால் கால் வலித்தது,
ஆனால் உண்மை புரிந்தது,
என் அவசர வேலையினும்
அவசரத் தேவை,
உலகமயமாக்கல் எதிர்ப்பு...!!!
Avasaramaana velai
Bus kidaikkavillai,
Nadakkath thuvanginen,
Latha oru pena kettale,
Kadaikkul nuzhaindhen.
Vandhaan oru siruvan,
Pankajammalin peran,
Vaanginaan oru Cococola,
Beram peasavillaye,
Netru, Pankajammal,
Keeraikkaariyidam moondru roobaai keeraikkattai
Irandarai roobaaikku beram pesinaale,
Siriththukkonden...!
Siruvayadhil,
Panai olaiyil kaatraadi seidhu,
Poovarasa ilaiyil oodhal seidhu,
Vilaiyaadinome,
M! Indru
Andha aakkaththai eppam vittu vittadha
Indhakk kadayilulla Barbie bommaigal.?
60 vayadhu kizhavanum than
80 vayadhu thaayai kaappatrum innattil
Annayar dhinam ennalum
Adharkedharkku oru naal kondaatam?
Adharkken vaazhthattai?
Adhai yen vaanginaal Tina.?
Thodarndhen
Vazhiyil t.v. kadai,
Vaasalil ilainyargal gumbal
India Pakistan irudhi aatamaam..
Padikkum vayadhil vilayaadalam,
Thalaivanaaga kanavu kaanalaam,
Adimayaagalaama,
Adhuvum Cricketirkku.?
Siridhu dhoorathil oru kuyavan,
Kudai pidiththirundhaan,
Panai olayaal.
Pakkathuk kadayil kothukoththaai,
Thratchai alla,
Plastic kudangal...
Nadandhadhaal, kvaliththadhu,
Aanal unmai purindhadhu.
En avasara velayinum,
Avasaraththevai,
Ulagamayamaakkal edhirppu...
வழியில் டீ.வீ கடை,
வாசலில் இளைஞர்கள் கும்பல்.
இந்தியா பாகிஸ்தான் இறுதி ஆட்டமாம்...
படிக்கும் வயதில் விளையாடலாம்,
தலைவனாகக் கனவு கானலாம்,
அடிமையாகலாமா.?
அதுவும் கிரிகெட்டிற்கு.?
சிறிது தூரத்தில் ஒரு குயவன்
குடை பிடித்திருந்தான்,பனை ஓலையால்...
பக்கத்துக் கடையில் கொத்துக் கொத்தாய்,
திராட்சை அல்ல,
பிளாஸ்டிக் குடங்கள்...
நடந்ததால் கால் வலித்தது,
ஆனால் உண்மை புரிந்தது,
என் அவசர வேலையினும்
அவசரத் தேவை,
உலகமயமாக்கல் எதிர்ப்பு...!!!
Avasaramaana velai
Bus kidaikkavillai,
Nadakkath thuvanginen,
Latha oru pena kettale,
Kadaikkul nuzhaindhen.
Vandhaan oru siruvan,
Pankajammalin peran,
Vaanginaan oru Cococola,
Beram peasavillaye,
Netru, Pankajammal,
Keeraikkaariyidam moondru roobaai keeraikkattai
Irandarai roobaaikku beram pesinaale,
Siriththukkonden...!
Siruvayadhil,
Panai olaiyil kaatraadi seidhu,
Poovarasa ilaiyil oodhal seidhu,
Vilaiyaadinome,
M! Indru
Andha aakkaththai eppam vittu vittadha
Indhakk kadayilulla Barbie bommaigal.?
60 vayadhu kizhavanum than
80 vayadhu thaayai kaappatrum innattil
Annayar dhinam ennalum
Adharkedharkku oru naal kondaatam?
Adharkken vaazhthattai?
Adhai yen vaanginaal Tina.?
Thodarndhen
Vazhiyil t.v. kadai,
Vaasalil ilainyargal gumbal
India Pakistan irudhi aatamaam..
Padikkum vayadhil vilayaadalam,
Thalaivanaaga kanavu kaanalaam,
Adimayaagalaama,
Adhuvum Cricketirkku.?
Siridhu dhoorathil oru kuyavan,
Kudai pidiththirundhaan,
Panai olayaal.
Pakkathuk kadayil kothukoththaai,
Thratchai alla,
Plastic kudangal...
Nadandhadhaal, kvaliththadhu,
Aanal unmai purindhadhu.
En avasara velayinum,
Avasaraththevai,
Ulagamayamaakkal edhirppu...