Bhushavali
ஸப்த ஸ்தானத்திலும் வீற்றிருக்கும் இறைவர் வாழ்த்த;
ஸப்த கன்னியரும் மாதமொருவராய் என்னைக் காக்க;
ஸப்த ரிஷிகளும் மாதமொருவராய் ஆசி வழங்க;
வானவில்லின் நிறங்கள் ஒவ்வொன்றாய் வாழ்விற்கு வண்ணம் சேர்க்க;
ஸப்த ஸ்வரங்களும் இதயத்திற்கு இசை கூட்ட;
ஜென்மங்கள் ஒவ்வொன்றும் மனம் குளிர்விக்க;
வள்ளல்கள் ஏழ்வரும் என் வாழ்வை வளமாக்க;
உலக அதிசயஙள் ஒவ்வொன்றும் என்னைச் சிலிர்ப்பூட்ட ;
கொலை பாதக பாவங்கள் தனித்தனியே விட்டு விலக;
குண்டலினிகள் ஒவ்வொன்றும் மனம் மகிழ்விக்க;
மணப்பெண் அடியெடுக்கும் சப்த பதிகளும் ஆசி கூற;
ஒரு கழுதையின் வயது வரை இதழ் புன்னகைக்க;
இந்த ஏழு மாதங்களும் ஏழு நொடிகளாய் கரையாதோ...???


Saptha sthanathilum veetrirukkum iraivar vazhtha;
Saptha kanniyarum maadhamoruvaraai ennaik kaakka;
Saptha rishigalum madhamoruvaraai aasi vazhanga;
Vaanavillin nirangal ovvondraai vazhvirkku vannam serkka;
Saptha swarangalum idhyathirkku isai koota;
Janmangal ovvondrum manam kulirnikka;
Vallalgal ezhuvarum en vaazhvai valamaakka;
Ulaga adhisayangal ovvondrum ennai silirpoota;
Kolai paadhaga vaavangal thanithaniye vittu vilaga;
Kundalinigal ovvondrum manam magizhvikka;
Manappen adiyedukkum saptha padhigalum aasi koora;
Oru kazhudhaiyin vayadhu varai idhazh punnagaikka;
Indha ezhu madhangalum ezhu nodigalaai karayaadho...???
Bhushavali
போட்டிகளில் வெல்வது சுகம்
ஆனால்,
ஓட்டப்பந்தயத்தில்
நான் காலத்தை தோற்கடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லைதான்
காலம் – என்னிடம் தோற்றதில்
அதற்கு மகிழ்ச்சி
- எல்லை கொள்ளா மகிழ்ச்சி
எனக்கோ……?
வெறுமையின் உச்சக்கட்டம்……
மனமென்னும் குரங்கின் சந்தேகங்கள் பற்பல
நான் முட்டாளா…???
காலத்தை தோற்கடிக்க முற்படுகிறேனா?
நிலைமை தொடர்ந்தால்
காலத்தை வென்று, காலனிடம் தோற்றால்…???
காலனை சிறு புல்லாய் தான் மதிக்கிறேன்
அவனை மிதிக்கிறேன்.
ஆனால்….,
மணி நேரங்கள் நிமிடமாகவும்
வருடங்கள் யுகங்களாகவும்
இருப்பதேன்…???

Potigalil velvadhu sugam
Aanal,
Otappandhayaththil
Naan kaalaththai thorkadipen endru edhirparkavillaidhan
Kaalam – Ennidam thotradhil
Adharku magizhchi
- Ellai Kolla magizhchi
Enakko……?
Verumaiyin uchchakkattam……
Manamennum Kurangin sandhegangal Parpala
Naan muttaala…???
Kaalaththai thorkadikka murpadugirena?
Nilaimai thodarndhal
Kaalaththai vendru, Kaalanidam thotral…???
Kaalanai chiru pullaai dhan madhikkiren
Avanai midhikkiren.
Aanaal….,
Mani nerangal nimidamagavum
Varudangal yugangalagavum
Iruppadhen…???

மீண்டும் பந்தயம்
பங்கேற்கலாமா…? வேண்டாமா…?
பங்கேற்காமலே இருந்து விடலாம் தான்…
காலத்தை தோற்க்கடித்து
காலனிடம் தோற்க விருப்பமில்லை…
ஆனால்…
பங்கேற்காமலே இருக்க
மனமென்னும் குரங்கு ஒத்துழைக்கவில்லையே…!!!

Meendum pandhayam
Pangerkalaamaa…? Veendama…?
Pangerkaamale irundhu vidalaam dhan…
Kaalathai thorkadithu
Kaalanidam thorka viruppamillai…
Aanal…
Pangerkaamale irukka
Manamennum kurangu oththuzhaikkavillaiye…!!!

அழகு… அளவு… காலம்…
மூன்றும் கூடினால் சுகம்
ஒன்றாயினும் பிரிந்தால் நரகம் தான்
அளவு…
காணாமல் போய்கொண்டு இருக்கிறது…
காலம்…
கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவில்லை…!!!
உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

பந்தயம்…
காலத்தை வெகுவாய் பின்னே தள்ளி வென்றுவிட்டேன்…
வெற்றி கண்டு விட்டேன்…

உடலில் வலு குறைய…
கண்களில் கண்ணீர் மல்க…

இதழோரம் புன்னகை

Azhagu… Alavu… Kaalam…
Moondrum koodinaal sugam
Ondrayinum pirindhal naragam dhan
Alavu…
Kaanamal poikondu irukkiradhu…
Kaalam…
Kannukettum dhooram varai kaanavillai…!!!
Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Pandhyam…
Kaalathai veguvaai pinne thalli vendruvittean…
Vetri kandu vittean…

Udalil valu kuraiya…
Kanglil kanneer malga…

Idhazhoram punnagai