Bhushavali
மீண்டும் ரயில் நிலையத்தில் சில மணித்துளிகள்.

நான் அமர்ந்த இருக்கையின் அருகில்,
இருக்கையின் மீது சாய்ந்தபடி ஒரு சிறுமி.
வயது ஐந்து இருக்கும்.
ரோஜாப்பூ வண்ணத்தில் அழகிய சொக்காய் அணிந்து
சோக்காய் நின்றிருந்தாள்.
நான் வந்ததும் சற்று தள்ளி நின்ற
தந்தையை நோக்கிச் சென்றாள்.

அப்போது தான் கவனித்தேன்.
அவளது இரு கால்களும் ஊனமாயிருப்பதை.
இருப்பினும் ஓடி ஓடி - இல்லை
விந்தி விந்தி விளையாடி,
தந்தையோடு பேசி, சிரித்து,
சிறுமிக்கான அத்தனை குணங்களுடன்
பேரழகிய குழந்தை தெய்வமாய் காட்சி தந்தாள்.
அவள் தந்தைக்கே தாயாகி நின்ற
அவளது அக்கறையை ஏனென்று சொல்வேன்.
கால் சிறுத்திருந்தும், மனம் பெருத்திருந்தது அவளுக்கு.
அவளைக் காணக் காணச் சென்று விட்டாள்
அவளது ரயில் பெட்டிக்கு.

அவள் போனதும் வந்தாள் ஒருத்தி.
மீண்டும் ஒரு ஐந்து வயது சிறுமி.
தன் சின்னஞ்சிறு பாதங்களால்
பெரிய பெரிய கட்டங்களில்
கட்டத்திற்கொரு கால் வைக்கும் முயற்சியில்.
சில இடங்களில் தாவியும்,
சில இடங்களில் ஓடியும்,
சில இடங்களில் தட்டுத்தடுமாறி
இரு பாதங்கள் வைத்தும்
நான் காணக் காண அவளும் சென்றாள்.

ஏதும் அறியா சின்னஞ்சிறு பெண் சிசுவை கொல்வதெதற்கு..???
இதயம் கரையும்
உள்ளம் உருகும்
இக்காட்சிகளை காணாமலிருப்பதற்கா.???


Meendum rayil nilaiyaththil sila maniththuligal.

Naan amarndha irukkaiyin arugil,
Irukkaiyin meedhu saayndhapadi oru sirumi.
Vayadhu aindhu irukkum.
Rojaappuu vannaththil azhagiya sokkaay anindhu
Sookkaay ninrirundhaal.
Naan vandhadhum satruu thalli nindra thanthaiyai nokki chendraal.
Appodhu dhaan kavaniththen.
AvaLadhu iru kaalgalum oonamaayiruppadhai.
Iruppinum oodi oodi - illai
Vindhi vindhi vilaiyaadi,
Thandhaiyodu pesi, siriththu,
Sirumikkaana aththanai kunangaludan
Perazhagiya kuzhandhai theyvamaay kaatchi thandhaal.
Aval thandhaikke thaayaagi nindra
Avaladhu akkaraiyai enendru solven.
Kaal siruththirundhum, manam peruththirundhadhu avalukku,
Avalai kaanak kaana chendru vittaal
Avaladhu rayil pettikku.

Aval ponadhum vandhaal oruththi.
Meendum oru aindhu vayadhu sirumi.
Than chinnanjiru paathangalaal
Periya periya kattanggalil
Kattaththirkoru kaal vaikkum muyarchiyil.
Sila idanggalil thaaviyum,
Sila idanggalil oodiyum,
Sila idanggalil thattuththadumaari
Iru paadhanggal vaiththum
Naan kaana kaana avalum chendraaL.

Edhum ariyaa chinnanjiru pen sisuvai kolvadhedharku..???
Idhayam karaiyum
Ullam urugum
Ikkaatchigalai kaanaamaliruppadharkaa.???