Bhushavali
அரவிந்தா,
நீ அன்று என்னைச் சாடினாய், ஏற்றுக்கொண்டேன்.
உனக்கு உரிமைகள் உண்டு.
அது என்னையும் பாதிக்கவில்லை
அந்நொடியில் உன் மனத் ததும்பல்களை நானறிவேன்.
உன்னை மறந்து, என் திசை நோக்கிச் சென்றேன்.

சற்றே சமயத்தினுள் , நீ என்னை அழைத்தாய்.
மன்னிப்பு கோரினாய்.
ஒரு நிமிடம் அதிசயித்தேன்.
அதிசயமா, அபூர்வமா - அது யாதென்றறியேன்.
நீ கூறியிருக்க வேண்டிய அவசியமும் உனக்கில்லை.
நானும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.

அத்தொடு உன்னை மறந்திருப்பேன்.
அந்த ஒரு வார்த்தையால்,
இன்றும் உன்னை நினைவு கோருகிறேன்.
உன் நலம் வேண்டுகிறேன்.


Aravindhaa,
Nee andru ennai chaadinaay, Etrukkonden.
unakku urimaigal undu.
adhu ennaiyum baadhikkavillai
annodiyil un manath thadhumbalgalai naanariven.
unnai marawdhu, en dhisai nokki chendren.

chatre samayaththinul , nee ennai azhaiththaay.
mannippu korinaay.
oru nimidam adhisayiththen.
adhisayamaa, abuurvamaa - adhu yaadhendrariyen.
nee kooriyirukka veendiya avasiyamum unakkillai.
naanum adhai edhirppaarkkavillai.

aththodu unnai marandhiruppen.
andha oru vaarththayaal,
indrum unnai ninaivu koorugiren.
un nalam vendugiren.
Bhushavali
6 வருடங்களுக்கு முன்பு சந்தித்த நண்பர் கிரீஷுக்கு சமர்ப்பணம்
Dedicated to my dear friend Girish whom I last met before 6 yrs.

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன,
புதிய புகைப்படஙள் சிலவற்றை கிளரினால்...
முகச்சாயல்களில் சில மாற்றங்கள்,
அகத்தினுள் நிற்பதோ அதே தோழமை...


pazhaya ninaivugal meendum malargindrana,
pudhiya pugaippadangal silavattrai kilarinaal...
mugachchayalgalil sila maatrangal,
agathinul nirpodo adhe thozhamai...