Bhushavali
சென்னை மாநகரப் பேருந்து. அரிது அரிது அப்பேருந்தில் அமர இடம் கிடத்தல் அரிது.
இருப்பினும் அன்று கிடைத்தது...
சில நிமிடஙளில் செவிகளில் நிறைந்தது,
சிறு பிள்ளையின் அரைக்கூவல்
அங்கு நோக்கினால்,
விழிகளில் நீர் நிரைந்து அழுதபடி,
ஒரு செண்பகமலர்..
அந்த செங்காந்தள் மங்கைக்கோ,
நெரிசலில் செண்பகமலருடன் ஒரு போராட்டம்..
சற்று நேரத்தில், மூதாட்டி ஒருத்தி,
தள்ளாத வயதில் மக்கள் தோளின்றி,
தனியெ ஒரு போராட்டம்...
என் மனதிலோ,
அதனினும் பெரிய போரட்டம்,
நான் எழுந்து இடம் தரவா.?
இல்லை நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருக்கவா.?
எழுந்து இடம் தராவிட்டால் நான் கல் நெஞ்சக்காரியா.?
எழுந்து இடம் தந்தால்,
நான் ஜனத்தொகை பெருக்கதிற்கு வழி கோல்கிறேனா.?
பெற்ற தாயை கவனிக்கத் தவறிய மாக்களுக்கு தோள் கொடுக்கிறேனா.?
தினம் தினம் மனதில் கேள்விக்குறி....
Chennai maanagarap peerundhu.
Aridhu aridhu apperundhil amara idam kidaiththal aridhu.
Iruppinum andru kidaithadhu...
Sila nimidangalil sevigalil niraindhadhu,
Siru pillaiyin araikuuval
Angu nokkinaal,
Vizhigalil niir niraindhu azhudhapadi,
Oru chenbagamalar..
Andha sengandhal mangaiko,
Nerisalil chenbagamalarudan oru porattam..
Satru neeraththil, Moodhaatti oruththi,
Thallaadha vayadhil makkal tholindri,
Thaniye oru poraattam...
En manadhiloo, adhaninum periya porattam,
Naan ezhundhu idam tharavaa.?
Illai nenjchai pidithapadi amarndhirukkavaa.?
Ezhundhu idam tharaavittaal naan kal nenjchakkaariyaa.?
Ezhundhu idam thandhaal,
Naan janaththogai perukkathirku vazhi koolgirenaa.?
Petra thaayai gavanikkath thavariya maakkalukku thol kodukkirenaa.?
Dhinam dhinam manadhil kelvikkuri....
Bhushavali
நண்பர் ஸ்ரீனிவாசனின் தந்தைக்கு சமர்ப்பணம்:Dedicated to Mr. Srinivan's dad:
சாமி,
உன் தந்தை அப்பாசாமி...
உன் தந்தைக்கோ நீயே அப்பா, சாமி.
உன்னைச் சான்றோன் எனக் கேட்ட உன் அப்பா,
உன் உணர்வில், உயிரில், என்றும் நிலைக்கும் சாமி...
Saami,
Un thandhai appasaami,
Un thandahikko neeye appa, saami.
Unnai chaandron ena ketta un appa,
Un unarvil, uyril endrum nilaikkum Saami...