ரௌத்ரம் பழகு என்றாயே...
நீ கூறியது தவறா?
நான் புரிந்து கொண்டது தவறா?
என் ரௌத்ரம்,
என்னையே அழிப்பதென்ன???
கூறடா பாரதி...
Rowdhram Pazhagu endraye...
Nee kooriyadhu thavaraa?
Naan purindhukondadhu thavaraa?
En roudhram,
Ennaye azhippadhenna???
Koorada Bharathi...
சுட்டும் விழிச்சுடர்கள் தளர்ந்து விட்டன...
வட்டக் கரியவிழிகள் சிவந்து விட்டன...
பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வைரங்கள் இங்கு தடங்கல்களாயின...
வெறுப்பும் வருத்தமும் குடிகொண்ட முகத்தில் சுந்தரப் புன்னகை தொலைந்து போனது...
நெஞ்சின் அலைகள், ரௌத்திர அலைகள் அடித்து ஓய்ந்தன...
குரலோ கேட்பாரின்றி தவித்தது...
குமரி என் மீது மருவக் காதல் கொண்டவன் எங்கோ தொலைவில்..
ஏனடா எனக்கு இன்னிலை,கூறடா பாரதி....
chuttum vizhichudargal thalarndhu vittana...
vattak kariyavizhikal chivandhu vittana...
pattu karuniila pudavaiyil padhiththa nal vairangkal ingu thadangalgalaayina...
veruppum varuththamum kudikonda mugaththil sundhara punnakai tholaindhu poonadhu...
nenjin alaigal, raudhdhira alaikal adiththu ooyndhana...
kuralo ketpaarindri thaviththadhu...
kumari en meedhu maruvak kaadhal kondavan enggoo tholaivil..
eenadaa enakku innilai,kuuradaa baarathi....
நல்லதோர் வீணை செய்து
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
என்று அன்று சிவ சக்தியிடம் கேட்டாய்....
என் சிற்றறிவு வல்லமையின்றி தொலைகிறதே
சுடர் மிகும் அறிவு கொண்ட உன் நிலை
இன்று புரிகிறது...
nalladhor viinai seydhu
adhai nalam keda puzhudhiyil erivadhundo
enru anru shiva shakthiyidam kettaay....
en chitrarivu vallmaiyindri tholaigiradhee
chudar migum arivu konda un nilai
indru purigiradhu...
ஆசை முகம் மட்டுமல்ல
எல்லாமே மறந்து போச்சு
செவிப்பறைகளுள் திட்டுகள் மட்டுமே...
aasai mugam mattumalla
ellame marandhu poochu
sevipparaigalul thittugal mattume...
பொழுது புலர்ந்தது நான் செய்த தவத்தால் தானோ?
கோர நிகழ்வுகளையும் தரிசிக்க வேண்டிய கொடுமையையும்
உடன் இழுத்து வருகிறதே ...
pozhudhu pularndhadhu naan seidha thavathaal dhaano?
kora nigazhvugalayum sandhikka vendiya kodumayayum
udan izhuthu varugiradhe...