Bhushavali
அன்பிற்க்குரிய சித்ரா அக்காவுக்காக... :)
Dedicated to dearest Chituka... :)

சோளத்தைத் தூக்கி தண்ணீரில் போட்டு
மேளத்தைக் கொட்டினால் - அது 
காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும். 
அது என்ன...???

Solathai thookki thanniril pottu 
Melathai kottinaal - adhu 
Kaalaakaalathukkum nilaiththu nirkkum. 
Adhu enna...???
Bhushavali
சலசலவென்ற இலைகளின் படபடப்பில், 
சிலுசிலுவென்ற காற்று.
கருகருவென்ற மேக மூட்டத்தில், 
குயில்களின் கூகூவென்ற பாட்டு.
நெடுநெடுவென்ற வேப்பமரத்தில், 
கண்ணங்கரேலென்ற காகங்களின் கூத்து.
முதுகில் முக்கோடுகள் கொண்டு, 
குடுகுடுவென்று ஓடி விளையாடும் அணில். 
திருதிருவென்று முழிக்கும் குழந்தைகளைப் பற்றும் 
அன்பிற்க்குரிய தாய்களின் பாசம். 
கிடுகிடுவென சளைக்காமல் உணவு தேடும் 
சிறுசிறு பிள்ளையார் எறும்புகள். 
கிணிகிணி என்ற மணியின் சப்தத்தோடு, 
மந்திரம் ஜபிக்கும் கோயில் குருக்கள். 
எல்லாம் இணைந்த கோவில் 
இதயத்திற்கு அமைதி சேர்க்குமாம்.


Salasalavendra ilaigalin padapadappil 
Silusiluvendra kaatru. 
Karukaruvendra mega muuttaththil, kuyilgalin 
Kuukuuvendra paattu. 
Neduneduvendra veppamaraththil, 
Kannanggarelendra kaaganggalin kuuththu. 
Mudhugil mukkodugal kondu, 
Kudukuduvendru odi vilaiyaadum anil. 
Thiruthiruvendru muzhikkum kuzhandhaigalai patrum 
Anbirkkuriya thaaygalin paasam. 
Kidukiduvena salaikkaamal unavu thedum 
Sirusiru pillaiyaar erumbugal. 
Kinikini endra maniyin sapdhaththoodu, mandhiram  
Jabikkum koyil kurukkal. 
Ellaam inaindha kovil idhayaththirku 
Amaidhi serkkumaam.
Bhushavali
பொறுமை எருமையினும் சாலச் சிறந்தது - 
எனப் பள்ளி நாட்களில்,  
கிண்டலாய் உரைப்பதுவும் உண்டு. 

அந்தப் பொறுமை,  
இந்த நொடியில், 
என்னைவிட்டு விலகிச் சென்றதோ.? 

ரயிலுக்காக, 
கடந்த ஒரு மணிநேரமாகக் காத்திருப்பு... 
அரை மணிநேரம், 
சுற்றத்தை ரசித்தாலும், 
பின்பு வேலையும், 
ஊர் போய்ச் சேர வேண்டிய, 
அத்தியாவசியமும் ஒருசேர, 
மெய் மறந்த ரசிப்பு 
மெய் நிறைந்த காத்திருப்பாய், 
உருமாறி, 
திருமாறி, 
சோமாறியானது... 

நெடுந்தொலைவு செல்லும் 
இரு கோடுகளில் விழிவைத்து, 
பெட்டிகள் இணைந்த பாம்பாய் வரும் 
வாகனம் ஒன்றுக்கு 
ஒரு நெடும் காத்திருப்பு...


Porumai erumaiyinum saalach chirandhadhu - 
Ena pallii naatkalil,  
Kindalaay uraippadhuvum undu. 

Andha porumai,  
Indha nodiyil, 
Ennaivittu vilagi chendradho.? 

Rayilukkaaga, 
Kadandha oru manineramaaga kaaththiruppu... 
Arai manineram, 
Sutraththai rasiththaalum, 
Pinbu velaiyum, 
Oor pooi chera vendiya, 
Aththiyaavasiyamum orusera,
Mey marandha rasippu 
Mey niraindha kaaththiruppaay, 
Urumaari, 
Thirumaari, 
Somaariyaanadhu... 

Neduntholaivu sellum 
Iru kodugalil vizhivaiththu, 
Pettigal inaindha paambaay varum 
Vaaganam ondrukku 
Oru nedum kaaththiruppu...
Bhushavali
விடியற்காலை மணி ஆறு...
பொழுது அழகாய், பொறுமையாய் புலர்கிறது...
வானம் கரு நீலத்திலிருந்து,
ஒளிர் நீலமாய் மாறுகிறது...
நிழலாய் நின்ற பனையும், தென்னையும்,
பச்சையாய் உருவெடுக்கின்றன...

பூட்டு திறந்து, கதவுகளை நீக்கும் சப்தமும்,
வாசலில் நீர் தெளிக்கும் சப்தமும்,
வாசல் பெருக்கும் சப்தமும்,
ஒருங்கிணைந்து சூரியனை வரவேற்றன...

அந்நேரத்தில், இத்தகைய பொன் நேரத்தில்,
ரயில் நிலையத்தில், நான்...
என்னைச் சுற்றி, பற்பல மக்கள்...

பயணச்சீட்டு வாங்குவதும்,
செய்திப்பலகையை படிப்பதும்,
கடிகாரத்தை காண்பதும்,
குழந்தைகளை அடக்கும் பெற்றோரும்,
ஆட்டோக்களோடு காத்திருக்கும் ஓட்டுனர்களும்,
வழி மீது விழி வைக்கும், அழைக்க வந்தோரும்,
விழிகளில் ஏக்கத்துடன் வழியனுப்ப வந்தோரும்,
கயற்கண்களில் கனவுடன் கல்லூரிக்கு செல்வோரும்,
வருமானம் எண்ணி அலையும் பெரியோரும்,
எங்கு காணிணும் மக்கள் பலவிதம்...
அவர்களோடு ஒருவராய் நானும்...

மூச்சுடன் கலக்கும் தூய உயிர்வளியை உள்ளிழுத்து,
சுற்றும் உள்ள மக்களின் ஓயாப்பேச்சினைக் கேட்டு,
விழிகளில் நிறையும் சூரியனின் ஒளிக்கதிர்களை ஏந்தி,
கைய்யில் நோட்டுடன், பேனாவுடன்,
எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றும்,
ஒரு சிறு முயற்சியில்.......


Vidiyarkkaalai mani aaru...
Pozhudhu azhagaay, porumaiyaay pulargiradhu...
Vaanam karu niilaththilirundhu,
Olir niilamaay maarugiradhu...
Nizhalaay nindra panaiyum, thennaiyum,
Pachchaiyaay uruvedukkindrana...

Puuttu thirandhu, kadhavugalai niikkum sapthamum,
Vaasalil niir thelikkum sapthamum,
Vaasal perukkum sapthamum,
Orungginaindhu suuriyanai varavetrana...

Anneraththil, iththagaiya pon neraththil,
Rayil nilaiyaththil, naan...
Ennai chuttri, parppala makkal...

Payanachchiittu vaanguvadhum,
Cheydhippalagaiyai padippadhum,
Kadikaaraththai kaanbadhum,
Kuzhandhaigalai adakkum petrorum,
Autokkalodu kaaththirukkum oottunargalum,
Vazhi miidhu vizhi vaikkum, azhaikka vandhorum,
Vizhigalil ekkaththudan vazhiyanuppa vandhorum,
Kayarkangalil kanavudan kalloorikku selvorum,
Varumaanam enni alaiyum periyorum,
Engu kaaninum makkal palavidham...
Avargalodu oruvaraay naanum...

Muchudan kalakkum thuuya uyirvaliyai ullizhuthu,
Suttrum ulla makkalin oyaappechchinaik kettu,
Vizhigalil niraiyum suriyanin olikkadhirgalai endhi,
Kaiyyil notetudan, penaavudan,
Ennangalai ezhuththukkalaay maatrum,
Oru siru muyarchiyil.......
Bhushavali
என் நெஞ்சில் இலையுதிர் காலம்... 
ஒலி ஏந்திய இடங்களில் நிசப்தம்... 
தனியாக ஒரு பயணம்..??? - இல்லை 
தனிமையில் ஒரு பயணம்.  

மனத்தின் அலைகளின் அடக்கம், 
உடலின் செல்களில் குடியேறும். 
ஒவ்வொன்றாய் அது அடங்க, 
எதிர்ப்பார்ப்புகள் தானாய் அடங்கும்.  

இலைகள் உதிரத் துவங்க, 
உதிறமும் உதிர்த் துவங்க, 
துவண்டு போன மனத்தினை 
யாரும் தூக்கி நிறுத்துவோரும் உளரோ..???  

பிரிவினால் வரும் வலியைக் காட்டிலும் 
தனிமையின் வலி கொடியதடா... 
நீ இன்றி நான் இங்கு இருப்பது 
நீரின்றி மீனிருப்பதைப் போலாகுமடா...  

அனைவரும் சூழ்ந்திருக்க 
இங்கு தனிமையில் வதங்கி 
இலைகள் உதிர்ந்து, அலைகள் அடங்கி, 
வழியோடு விழி வைத்து 
உன்னை எதிர்நோக்கி நான்...


En nenjil ilaiyudhir kaalam... 
Oli endhiya idangalil nisaptham... 
Thaniyaaga oru payanam..??? - Illai 
Thanimaiyil oru payanam.  

Manaththin alaigalin adakkam, 
Udalin selgaLil kudiyeeRum. 
Ovvondraay adhu adangga, 
Edhirppaarppugal thaanaay adanggum.  

Ilaigal udhirath thuvangga, 
Udhiramum udhirth thuvangga, 
Thuvandu poona manaththinai 
Yaarum thookki niruththuvoorum uLaroo..???  

Pirivinaal varum valiyai kaattilum 
Thanimaiyin vali kodiyadhadaa... 
Nii indri naan inggu iruppadhu 
Neerindri meeniruppadhai polaagumadaa...  

Anaivarum suzhndhirukka  
Ingu thanimaiyil vadhangi 
Ilaigal udhirndhu, alaigal adangi, 
Vazhiyodu vizhi vaiththu 
Unnai edhirnokki naan...
Bhushavali
உயிரோடு உயிராகி, 
உறவாகி, 
உணர்வாகி, 
உடல்முழுதும் கசிந்துருகி....
அன்பே! 
உன்னோடு நான் வாழ 
ஒரு நொடி கிடைத்தால் போதும், 
உயிரையும் துறக்க 
ஒத்துக்கொள்வேன்...

Uyirodu uyiraagi, 
Uravaagi, 
Unarvaagi, 
Udalmuzhudhum kasindhurugi...
Anbe!
Unnodu naan vaazha 
Oru nodi kidaiththaal podhum, 
Uyiraiyum thurakka 
Oththukkolven...
Bhushavali
Pooch Cafe by Paul Gilligan

சிறு திண்பண்டத்தை காட்டி, 
அதன் மீது ஆர்வம் கொண்ட என்னை 
பிடித்திழுத்து, 
சிரசத்தை நீரினுள் புதைத்து, 
சுவாசம் நின்றதும், 
வெளி கொணர்ந்து, 
சிரசத்தையும், கைகளையும், கால்களையும் வெட்டி, 
முண்டமாகி நின்ற என்னை, 
உடல் சுட்டெரிக்கும் எண்ணையில் இட்டு, 
உடன் கூடே சில பதார்த்தங்களையும் போட்டு, 
ஐயகோ.....!!! 

மனம் வலித்து, 
உயிர் பிரிந்து, 
உடல் ரணமாகி, 
இருந்த என்னை


உண்டு களித்தது... அந்த மீன்...!!!



Siru thinpandaththai kaatti,
Adhan miidhu aarvam konda ennai 
Pidiththizhuththu, 
Sirasaththai niirinul pudhaiththu, 
Swaasam nindradhum, 
Veli konarndhu, 
Sirasaththaiyum, kaikalaiyum, kaalgalaiyum vetti, 
Mundamaagi nindra ennai, 
Udal sutterikkum ennaiyil ittu, 
Udan kuude sila padhaarththanggalaiyum pottu, 
Aiyagoo.....!!! 

Manam valiththu, 
Uyir pirindhu, 
Udal ranamaagi, 
Irundha ennai 


Undu kaliththadhu... andha meen...!!!