Showing posts with label சைவம் - Vegetarianism. Show all posts
Showing posts with label சைவம் - Vegetarianism. Show all posts
Bhushavali
என் வழியில் நான் நடக்க,
தடத்திலொரு விரல் இருக்க,
அதிர்ந்தேன்.
நெஞ்சம் கனத்தது.
நேற்று வரை ஓடி விளையாடி,
இரை தேடிய,
கோழி ஒன்று,
இன்று, பிணமாகி
வேறொருவனுக்கு உணவாகி
தன் விரலை நகத்தோடு,
நடுத்தெருவில் தொலைத்ததோ.???

En vazhiyil naan nadakka,
Thadaththiloru viral irukka,
Adhirnthen.
Nenjam ganaththadhu.
Netru varai Odi vilaiyaadi,
Irai thediya,
Koozhi ondru,
Indru, pinamaagi
Veroruvanukku unavaagi
Than viralai nagaththodu,
Naduththeruvil tholaiththadho.???
Bhushavali
உன் கைகளால் 
என் கால்களைப் பற்றி 
தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய். 
என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. 
இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை நான் அறிவேன்.  

விழிகளில் நீர் வற்றி, 
மனத்தில் வாழும் எண்ணம் வற்றி, 
இதோ 
என் மனத்திரையில் என் வாழ்வின் காலச்சக்கரம்; 
என் விழித்திரையில் காலனின் சிரிப்பு. 

உன் முகத்தில் சிறு சலனமும் இல்லை; 
வாடிக்கையாளர் முகத்தில் உணவின் திருப்தி; 
என் முகத்திலோ காலனைக் கண்ட பயம்.  

உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க 
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.? 
கொலை செய்வதில் உனக்கு அவ்வளவு விருப்பமா.?
பிணத்தை உண்ண உனக்கு அவ்வளவு விருப்பமா.?


Un kaikalaal En kaalkalaip patri 
Thalaikiizhaay thongga vittirukkiraay. 
En udalil innum uyir irukkiradhu. 
Idhudhaan en kadaisi nimidam enbadhai naan ariven.  

Vizhigalil niir vatri, 
Manaththil vaazhum ennam vatri, 
Idhoo 
En manaththiraiyil en vaazhvin kaalachchakkaram; 
En vizhiththiraiyil kaalanin sirippu.  

Un mugaththil siru salanamum illai; 
VaadikkaiyaaLar mugaththil unavin thirupthi; 
En mugaththilo kaalanai kanda bayam.  

Unakkaagave parpala chedikodigal irukka 
Nii yen ennai unna virumbukiraay.? 
Kolai seyvadhil unakku avvalavu viruppamaa.? 
Pinaththai unna unakku avvalavu viruppamaa.?
Bhushavali
Pooch Cafe by Paul Gilligan

சிறு திண்பண்டத்தை காட்டி, 
அதன் மீது ஆர்வம் கொண்ட என்னை 
பிடித்திழுத்து, 
சிரசத்தை நீரினுள் புதைத்து, 
சுவாசம் நின்றதும், 
வெளி கொணர்ந்து, 
சிரசத்தையும், கைகளையும், கால்களையும் வெட்டி, 
முண்டமாகி நின்ற என்னை, 
உடல் சுட்டெரிக்கும் எண்ணையில் இட்டு, 
உடன் கூடே சில பதார்த்தங்களையும் போட்டு, 
ஐயகோ.....!!! 

மனம் வலித்து, 
உயிர் பிரிந்து, 
உடல் ரணமாகி, 
இருந்த என்னை


உண்டு களித்தது... அந்த மீன்...!!!



Siru thinpandaththai kaatti,
Adhan miidhu aarvam konda ennai 
Pidiththizhuththu, 
Sirasaththai niirinul pudhaiththu, 
Swaasam nindradhum, 
Veli konarndhu, 
Sirasaththaiyum, kaikalaiyum, kaalgalaiyum vetti, 
Mundamaagi nindra ennai, 
Udal sutterikkum ennaiyil ittu, 
Udan kuude sila padhaarththanggalaiyum pottu, 
Aiyagoo.....!!! 

Manam valiththu, 
Uyir pirindhu, 
Udal ranamaagi, 
Irundha ennai 


Undu kaliththadhu... andha meen...!!!
Bhushavali
நீ எத்தனை நாட்களாய் காத்திருந்தாய்...??? 
உன் காத்திருப்பு இன்று முடிந்ததடா... 
உன் எண்ணங்கள் இன்று நிறைவேறியதடா... 
உன் நிம்மதி பிறந்ததடா...

எனக்கோ, 
மனம் நோகி..
உயிர் வெதும்பி.. 
நிம்மதி குலைந்து... 

வயிற்றினுள் நுழைந்த பிரேதத்தோடு 
பிரேதமாய் நானும்....


Nee eththanai naatkalaay kaaththirundhaay...??? 
Un kaaththiruppu indru mudindhadhadaa... 
Un ennanggal indru niraiveeriyadhadaa... 
Un nimmadhi pirandhadhadaa...

Enakkoo, 
Manam nogi.. 
Uyir vedhumbi.. 
Nimmadhi kulaindhu... 

Vayitrinul nuzhaindha predhaththodu 
Predhamaay naanum....
Bhushavali
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,
நீ வந்து நினைவு படுத்துகிறாய்...
மனதை வதைக்கவும் செய்கிறாய்...

அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...
உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...
எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்
எனக்கது அருவருப்பாக இல்லை...
அது என் தட்டில் இல்லாதவரையில்...

ஆனால்,
நீ கேட்கிறாய்...
"நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...
உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-
எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???

நண்பா,
இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...
உன் மனம் நோகுமே என்று...

நண்பா,
உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...
நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...
உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...
என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு...

Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...


மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...

Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...