Aug
17
Bhushavali
நீ இல்லாமல் நான்கு நாட்கள்
மூன்று நாட்களை ஒரு வழியாக தாட்டிவிட்டேன்
நான்காம் நாள்
வயிறு பிசைந்தது…
நெஞ்சு வலித்தது…
மூளை கிட்டத்தட்ட செயலிழந்தது…
கண்கள் உன்னைத் தேடின…
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது…
நிலை குலைந்திருக்கும் நான்,
உன் குரல் கேட்டால் -
நிலை தெளிவேன்...

Nee illamal naangu naatkal

Moondru naatkalai oru vazhiyaaga thaattivitten

Naangam naal

Vayiru pisaindhadhu…

Nenju valithadhu…

Moolai kittathatta seyalizhandhadhu…

Kangal unnai thedina…

Uyir oosaladikkondirukkiradhu…

Nilai kulaindhirukkum naan,

Un kural kettal -

Nilai theliven

Jul
12
Bhushavali
கண்ணோடு கண் பொறுத்தி
காதல் வார்த்தை சொன்னான்.
அப்போது புரியவில்லை –
கண் பொறுத்தியது கண்ணை அல்ல,
கல் பொறுத்திய
தங்கத்தோட்டினை என்பது!!!

Kannodu Kann Poruthi

Kadhal vaarthai sonnan.

Appodhu puriyavillai –

Kan poruthiyadhu kannai alla,

Kal poruthiya

Thanga thottinai enbadhu!!!

Mar
07
Bhushavali
When some question are un-warrantedly asked,
When a moment wrongly hanppens,
When some answers had to be given,
When some results turn haywire,
When some people do not see you correctly,
When the question is 'What did you do'.?
When you are hurt by all around you,
When you want to cry your heart out,
When you are not recognized for what you are,
When even the pen you write stops working,
What do you do.?????
Feb
14
Bhushavali

காதலாகி கசிந்துருகி

உயிர் கலந்து

உள்ளம் நிறைந்து நிற்கும்

காதல் உள்ளங்களுக்கு,

காதலர் தினம் என்ற ஒரு நாள் எதற்கு.?!!!

அன்றொரு நாள்

ஒரு துறவி,

காதல் உள்ளங்களை இணைக்க

தன் உயிரை அற்பணித்தான்.

இன்று அவன் பெயரை

வியாபாரமாக்கிய கொடுமை என்ன..???!!!!!

Kaadhalaagi kasindhurugi

Uyir kalandhu

Ullam niraindhu nirkum

Kaadhal ullanggalukku,

kaadhalar dhinam endra oru naal edharku.?!!!

Androru naal oru thuravi,

Kaadhal ullangalai inaikka

Than uyirai arpaniththaan

Indru avan peyarai

Viyaabaaramaakkiya kodumai enna..???!!!!!

Jan
24
Bhushavali
என் வழியில் நான் நடக்க,
தடத்திலொரு விரல் இருக்க,
அதிர்ந்தேன்.
நெஞ்சம் கனத்தது.
நேற்று வரை ஓடி விளையாடி,
இரை தேடிய,
கோழி ஒன்று,
இன்று, பிணமாகி
வேறொருவனுக்கு உணவாகி
தன் விரலை நகத்தோடு,
நடுத்தெருவில் தொலைத்ததோ.???

En vazhiyil naan nadakka,
Thadaththiloru viral irukka,
Adhirnthen.
Nenjam ganaththadhu.
Netru varai Odi vilaiyaadi,
Irai thediya,
Koozhi ondru,
Indru, pinamaagi
Veroruvanukku unavaagi
Than viralai nagaththodu,
Naduththeruvil tholaiththadho.???
Nov
29
Bhushavali
நண்பன் ஒருவன் வடமொழியில் சொன்னான்.
"தந்தை சம்பாதித்த சொத்தையும்,
தான் சம்பதித்த வரதட்சணையையும்,
ஆண்டு அனுபவிக்க வேண்டும்" - என்று.
சம்பதித்த வரதட்சணையா.?
இல்லை பிச்சை எடுத்த வரதட்சணையா.???!!!

Nanban oruvan vadamozhiyil sonnaan.
"Thanthai sambaadhitha sothaiyum,
Thaan sambadiththa varadatchanaiyaiyum,
Aandu anubavikka vEndum" - endru.
Sambathiththa varadatchanaiyaa.?
Illai pichchai eduththa varadatchanaiyaa.???
Oct
27
Bhushavali
உன்னால் தொலைத்த ரௌத்திரத்தை
உன் பிரிவால் மீண்டும் கண்டெடுத்தேன்.
இது நன்மையோ தீமையோ நானறியேன்.

இதோ இந்நொடியில்
ரௌத்திரம் மேலோங்கிட
செவிகளில் ரௌத்திர சப்தங்கள் ஒலிக்க
கைகளில் ரௌத்திரமேற்றும் ருத்திராட்சங்கள் இருக்க
அருகில் தண்டால் எடுக்கும் உபகரணங்களுடன்
கண்டெடுத்த ரௌத்திரம் விழிகளில் மின்ன
அனல் மூச்சுடன் அமர்ந்திருக்கிறேன்.


Unnaal tholaiththa rauthirathai
Un pirivaal mindum kandeduththen.
Idhu nanmaiyo thiimaiyo naanariyen.

Idho innodiyil
Rauthiram melonggida
Sevigalil rauthira sapthanggal olikka
Kaigalil rowthirametrum ruththiraatchanggal irukka
Arugil thandaal edukkum upagaranangaludan
kandeduththa rauthiram vizhigalil minna
Anal moochudan amarndhirukkiren.