Bhushavali
உன் கைகளால் 
என் கால்களைப் பற்றி 
தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய். 
என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. 
இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை நான் அறிவேன்.  

விழிகளில் நீர் வற்றி, 
மனத்தில் வாழும் எண்ணம் வற்றி, 
இதோ 
என் மனத்திரையில் என் வாழ்வின் காலச்சக்கரம்; 
என் விழித்திரையில் காலனின் சிரிப்பு. 

உன் முகத்தில் சிறு சலனமும் இல்லை; 
வாடிக்கையாளர் முகத்தில் உணவின் திருப்தி; 
என் முகத்திலோ காலனைக் கண்ட பயம்.  

உனக்காகவே பற்பல செடிகொடிகள் இருக்க 
நீ ஏன் என்னை உண்ண விரும்புகிறாய்.? 
கொலை செய்வதில் உனக்கு அவ்வளவு விருப்பமா.?
பிணத்தை உண்ண உனக்கு அவ்வளவு விருப்பமா.?


Un kaikalaal En kaalkalaip patri 
Thalaikiizhaay thongga vittirukkiraay. 
En udalil innum uyir irukkiradhu. 
Idhudhaan en kadaisi nimidam enbadhai naan ariven.  

Vizhigalil niir vatri, 
Manaththil vaazhum ennam vatri, 
Idhoo 
En manaththiraiyil en vaazhvin kaalachchakkaram; 
En vizhiththiraiyil kaalanin sirippu.  

Un mugaththil siru salanamum illai; 
VaadikkaiyaaLar mugaththil unavin thirupthi; 
En mugaththilo kaalanai kanda bayam.  

Unakkaagave parpala chedikodigal irukka 
Nii yen ennai unna virumbukiraay.? 
Kolai seyvadhil unakku avvalavu viruppamaa.? 
Pinaththai unna unakku avvalavu viruppamaa.?